சிலிக்கான் நான்கையோடைடு
சிலிக்கான் நான்கையோடைடு (Silicon tetraiodide) என்பது SiI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நான்முக வடிவ மூலக்கூறான இச்சேர்மத்தில் உள்ள Si-I பிணைப்புகளின் பிணைப்பு நீளங்கள் 2.432(5) Å ஆகும்[1] Si(NR2)4 (R = ஆல்கைல்) என்ற பொது வாய்ப்பாடு கொண்ட சிலிக்கான் அமைடுகள் தயாரிப்பதற்கான முன்னோடியாக சிலிக்கான் நான்கையோடைடு விளங்குகிறது[2]. பெருமளவில் சிலிக்கானைத் தயாரித்து உருச்செதுக்கி நுண்மின்னணுவியல் பயன்பாட்டில் உபயோகிக்கவும் இது பயன்படுகிறது. வினைகள்வலுவான வெப்பமூட்டலுக்கு இச்சேர்மம் நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. மற்றும் அறை வெப்பநிலையில் இதை நீண்ட காலத்திற்கு சேமித்து வைக்க முடியும். ஆனால் உலர் நிலையில் உள்ளவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது தண்ணீரில் உடனடியாக வினைபுரியும் தன்மை கொண்டது ஆகும். மேலும் சிலிக்கான் நாற்குளோரைடு போல மெதுவாக ஈரக்காற்றுடன் வினைபுரியவும் செய்யும். சிலிக்கான் அல்லது சிலிக்கான் கார்பைடுடன் அயோடின் சேர்த்து 200 ° செல்சியசு வெப்பநிலைக்குச் சூடாக்கினால் சிலிக்கான் நான்கையோடைடை பெருமளவில் தயாரிக்க முடியும். சிலேனுடன் அயோடின் சேர்த்து 130 முதல் 150° செல்சியசு வெப்பநிலைக்குச் சூடாக்கினால் தொடர்ச்சியாக அயோடோசிலேன், SiH3I முதலாக ஈரயோடோசிலேன், SiH2I2 மற்றும் மூவயோடோசிலேன், SiHI3 என ஒருவரிசைச் சேர்மங்கள் உருவாகின்றன. இச்சேர்மங்கள் அறை வெப்பநிலையில் நிறமற்ற திரவங்களாக உள்ளன[3]. மூவயோடோசிலேனை கார்பன் சேர்மமான அயோடோஃபார்மில் இருந்து உடனடியாக வேறுபடுத்த முடியும். ஏனெனில் அறை வெப்பநிலையில் அயோடோஃபார்ம் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia