சிலிகான் டெட்ராபுளோரைடு அல்லது டெட்ராபுளோரோசிலேன் (Silicon tetrafluoride) SiF4 என்ற மூலக்கூறு வாய்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும். இந்த நான்முகி மூலக்கூறானது, மிகக் குறைவான வெப்பநிலைக்குள் மட்டுமே திரவமாக இருக்கக்கூடிய தன்மைக்காக குறிப்பிடத்தக்கதாக உள்ளது. (இதனுடைய கொதிநிலையானது இதன் உருகுநிலையைக் காட்டிலும் 4 °C மட்டுமே கூடுதலானது. இச்சேர்மமானது 1812 ஆம் ஆண்டில் முதன் முதலில் சான் டேவி என்ற வேதியியலாளரால் தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்டது. [2]
தயாரிப்பு
SiF 4 ஆனது பாசுபேட் உரங்கள் தயாரிப்பில் கிடைக்கும் துணை விளைபொருளாகும். பாசுபேட்டு பாறைகளில் காணப்படும் மாசுப்பொருளான சிலிக்கேட்டுகளை புளோர்அபடைட்டின் புரோத்தான்பகுப்பினால் கிடைக்கக்கூடிய HF தாக்கும் போது இது கிடைக்கிறது. ஆய்வத்தில் BaSiF 6 சேர்மத்தை 300 °செ, வெப்பநிலைக்கு மேல் வெப்பப்படுத்தும் போது இத்திண்மமானது எளிதில் ஆவியாகக்கூடிய SiF 4 ஐ வெளியிட்டு BaF 2.ஐ வீழ்படிவாக விட்டுச்செல்கிறது. இச்சேர்மத்தைத் தயாரிக்கத் தேவைப்படும் BaSiF 6 iஆனது எக்சாபுளோரோசிலிசிக் அமிலத்தின் நீரிய கரைசலை பேரியம் குளோரைடுடன் வினைப்படுத்தி தயாரிக்கப்படுகிறது. [3] இதே போன்ற மற்றுமொரு சேர்மமான GeF 4 இதே முறைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. வெப்பச்சிதைவு முறையில் வெப்பச்சிதைவுக்குத் தேவையான வெப்பநிலை 700 ° செல்சியசாக உள்ளது.[4]SiF 4 ஆனது சிலிகான் டை ஆக்சைடை ஐதரோபுளோரிக் அமிலத்தில் வைப்பதன் மூலமாகவும் தயாரிக்கப்படுகிறது. வினையானது பின்வரும் சமன்பாட்டின் படி நிகழ்கிறது.
எளிதில் ஆவியாகக்கூடிய இந்த சேர்மமானது நுண்மின்னணுவியலிலும் மற்றும் கரிமத்தொகுப்பு முறைகளிலும் மிகக் குறைந்த அளவே பயன்படுகிறது. [5]
கிடைக்கும் விதம்
எரிமலையின் வாயிலிருந்து வரும் புகைத்துகள்களில் சிலிகான் டெட்ராபுளோரைடு குறிப்பிடத்தக்க அளவில் கிடைக்கிறது. இந்த முறையில் தயாரிக்கப்படும் சேர்மத்தின் அளவு நாளொன்றுக்கு பல டன்கள் ஆக உள்ளது. [6] சிலிகான் டெட்ராபுளோரைடானது பகுதியளவு நீராற்பகுப்பு அடைந்து எக்சாபுளோரோசிலிசிக் அமிலத்தை உருவாக்குகிறது.
மேற்கோள்கள்
↑"Fluorides (as F)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).