உமரியா மாவட்டம்
உமரியா மாவட்டம், மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் உமரியா ஆகும். இது ஷாடோல் கோட்டத்தில் அமைந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் 42% பகுதிகள் காடுகளைக் கொண்டது. மாவட்ட நிர்வாகம்இம்மாவட்டம் பாண்டவபூர், மன்பூர் மற்றும் பாலி என மூன்று வருவாய் உட்கோட்டங்களையும்; உமரியா, சாண்டியா, நவுரோசாபாத், மன்பூர் மற்றும் பாலி என ஐந்து வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. உமரியா நகராட்சியும், சாண்டியா, நவுரோசாபாத் மற்றும் பாலி என மூன்று நகரப் பஞ்சாயத்துக்களும்; கர்கேலி, மன்பூர் மற்றும் பாலி என மூன்று ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளது. பொருளாதாரம்பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 இந்திய மாவட்டங்களில் உமாரியா மாவட்டமும் ஒன்றாக இந்திய அரசால் 2006- ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டுதோறும் நிதி உதவி வழங்கி வருகிறது.[1] இம்மாவட்டத்தில் சிறிதளவில் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளது. மக்கள் தொகையியல்2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 644,758 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 82.85% மக்களும்; நகரப்புறங்களில் 17.15% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 24.96% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 330,674 ஆண்களும் மற்றும் 314,084 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 950 பெண்கள் வீதம் உள்ளனர். 4,076 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 158 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 65.89 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 76.02 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 55.23 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 103,414 ஆக உள்ளது. [2] சமயம்இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 620,515 (96.24 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 15,966 (2.48 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, சமண, பௌத்த சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது. மொழிகள்மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார பழங்குடியின மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது. இதனையும் காண்கமாவட்ட எல்லைகள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia