மைகார் மாவட்டம்
மைகார் மாவட்டம் (Maihar district) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் 55 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் மைகார் நகரம் ஆகும். சத்னா மாவட்டத்தின் மைகார், அமர்பதான், ராம்நகர் ஆகிய 3 வருவாய் வட்டங்களைக் கொண்டு இப்புதிய மாவட்டம் 5 அக்டோபர் 2023 அன்று நிறுவப்பட்டது. [1][2] இம்மாவட்ட சிமெண்டு ஆலைகளுக்கும், சாரதா மலைக்கோயிலுக்கும் பிரபலமானது. 2011ஆம் கணக்கெடுப்பின்படி, இம்மாவட்ட மக்கள் தொகை 8, 56,028 ஆகும். இம்மாவட்டத்தில் இந்தி மொழி மற்றும் பாகேலி மொழிகள் பேசப்படுகிறது. வரலாறுபிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் மைகார் மாவட்டப் பகுதிகள் மைகார் சமஸ்தானத்தில் இருந்தது. மாவட்ட நிர்வாகம்தமசா ஆறு பாயும் இம்மாவட்டம் 2722.79 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டம் மைகார், அமர்பதான், ராம்நகர் என மூன்று வருவாய் வட்டங்களையும், 713 கிராமங்களையும், மைகார் எனும் நகராட்சியும், அமர்பதான் மற்றும் இராம்நகர் எனும் இரண்டு பேரூராட்சிகளையும் கொண்டது.[3] பொருளாதாரம்இம்மாவட்டத்தில் கோதுமை, பருப்பு வகைகள், தக்காளி மற்றும் பாகற்காய் அதிகம் பயிரிடப்படுகிறது. இம்மாவட்டத்தில் மூன்று பெரிய சிமெண்ட் ஆலைகள் கொண்டுள்ளது. அரசியல்இம்மாவட்டம் சத்னா மக்களவைத் தொகுதிக்கும்[4] மற்றும் மைஹர் (சட்டமன்றத் தொகுதி) & அமர்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் உட்பட்டது. போக்குவரத்துமைகார் தொடருந்து நிலையம் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது.[5] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia