சித்தி மாவட்டம்
சித்தி மாவட்டம் (Sidhi district) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் சித்தி ஆகும். இது ரேவா கோட்டத்தில் அமைந்துள்ளது. மாவட்ட நிர்வாகம்ரேவா வருவாய் கோட்டத்தில் உள்ள சித்தி மாவட்டம் கோபத் பனாஸ், சுர்ஹட், ராம்பூர் நய்கின், மஜ்ஜௌளி, குஷ்மி மற்றும் பத்பாரா என ஆறு வருவாய் வட்டங்களைக் கொண்டது. சித்தி மாவட்டம் சித்தி, ராம்பூர், குஷ்மி, சிக்வால், மஜ்ஜௌளி என ஐந்து ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது. மக்கள் தொகையியல்2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,127,033. ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 23.72% ஆக உயர்ந்துள்ளது. இம்மாவட்டத்தின் படிப்பறிவு 67.4% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 36.0% ஆகவும் உள்ளது. [1] மொழிகள்மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது. இதனையும் காண்கமாவட்ட எல்லைகள்மேற்கோள்கள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia