கசூர் மாவட்டம் ('Kasur District), பாக்கித்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் 41 மாவட்டங்களில் ஒன்றாகும். பஞ்சாப் மாகாணத்தின் வடகிழக்கில் அமைந்த இதன் நிர்வாகத் தலைமையிடம் கசூர் நகரம் ஆகும். கசூர் நகரமானது,
பஞ்சாப் மாகாணத் தலைநகரான லாகூருக்கு தெற்கே 52.6 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்கிழக்கே 427 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
இம்மாவட்டத்தின் வடக்கில் மற்றும் தெற்கில் ராவி ஆறும், தென்கிழக்கே சத்லஜ் ஆறும் பாய்கிறது. பியாஸ் ஆறு இம்மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கிறது. இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 198 மீட்டர் உயரத்தில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 645,308 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 4,084,286 ஆகும். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 104.53 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 62.85% ஆகும்.[1][3] இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,146,988 (28.10%) ஆக உள்ளனர்.[4]நகர்புறங்களில் 1,243,882 (30.46%) மக்கள் வாழ்கின்றனர்[1]
சமயங்கள்
இம்மாவட்டத்தில் இசுலாம் சமயத்தை 96.52% மக்களும், கிறித்துவத்தை 3.43% மக்களும், இந்து போன்ற பிற சமயங்களை 0.05% மக்களும் பின்பற்றுகின்றனர்.
இம்மாவட்டத்தில் பியாஸ் ஆறு]ம், அதன் கால்வாய்களும் வேளாண்மை வளர்ச்சிக்கு உதவுகிறது. இம்மாவட்டம் தொழில் மற்றும் வணிக வளர்ச்சி மேம்பட்டிருந்தாலும், இங்கு பாகிஸ்தான் இராணுவத்தின் தரைப்படை அணிகளின் பாசறைகள் உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
பஞ்சாப் (பாகிஸ்தான்) மாகாணத்தின் 41 மாவட்டங்கள் கசூர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்களைக் காட்டு வரைபடம்