இலாகூர் மாவட்டம்

லாகூர்
ضلع لاہور (Urdu)
மாவட்டம்
மேல்: பாட்சாகி பள்ளிவாசல்
கீழ்: முகலாயப் பேரரசன் ஜகாங்கீரின் கல்லறை
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் மாவட்டத்தின் அமைவிடம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 31°25′N 74°20′E / 31.417°N 74.333°E / 31.417; 74.333
நாடு பாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப்
கோட்டம்லாகூர்
நிறுவிய ஆண்டு1849
தோற்றுவித்தவர்பிரித்தானிய இந்தியா
தலைமையிடம்லாகூர்
வருவாய் வட்டங்கள்05
அரசு
 • வகைமாவட்டம் (நிர்வாகி-துணை ஆணையாளர்
பரப்பளவு
 • மொத்தம்1,772 km2 (684 sq mi)
ஏற்றம்
217 m (712 ft)
மக்கள்தொகை
 (2023)[1]
 • மொத்தம்1,29,78,661
 • அடர்த்தி7,300/km2 (19,000/sq mi)
எழுத்தறிவு
 • எழுத்தறிவு %
  • மொத்தம்
    (79.62%)
  • ஆண்:
    (81.41%)
  • பெண்:
    (77.59%)
நேர வலயம்ஒசநே+05:00 (பாகிஸ்தான் சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:PK
இணையதளம்lahore.punjab.gov.pk

லாகூர் மாவட்டம் (Lahore District), பாக்கித்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் 41 மாவட்டங்களில் ஒன்றாகும். பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான லாகூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைமையிடம் மற்றும் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். லாகூர் நகரமானது, நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்கிழக்கே 377 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2023ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் இதன் மக்கள் தொகை 1,29,78,661 (10.29 மில்லியன்) ஆகும்.[1][3][4]

மாவட்ட எல்லைகள்

லாகூர் மாவட்டத்தின் வடக்கிலும், மேற்கிலும் சேய்க்குப்புரா மாவட்டம், கிழக்கில் இந்திய பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டம், தெற்கில் கசூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 2,010,225 குடியிருப்புகள் கொண்ட லாகூர் மாவட்ட மக்கள் தொகை 13,004,135 ஆகும். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 112.47 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.62% ஆகும்.[5][6] இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 3,231,990 (24.9%) ஆக உள்ளனர்.[7]இம்மாவட்ட மக்கள் அனைவரும் நகர்புறங்களில் வாழ்கின்றனர்.[5]

சமயம்

இம்மாவட்டத்தில் இசுலாம் 95.26%, இந்து சமயம் 0.80%, கிறித்தவம் 4.64% மற்றும் பிற சமயங்கள் 0.1% மக்கள் பின்பற்றுகின்றனர்.[8]

மொழிகள்

இம்மாவட்டத்தில் பஞ்சாபி மொழியைல் 73.58% மக்களும், உருது மொழியை 21.13% மக்களும், பஷ்தூ மொழியை 2.01% மக்களும், சராய்கி மொழியை 0.49% மக்களும், இந்த்கோ மொழியை 0.25% மக்களும் தாய் மொழியாகப் பேசுகின்றனர்.[9]

மாவட்ட நிர்வாகம்

பஞ்சாப் (பாகிஸ்தான்) மாகாணத்தின் 41 மாவட்டங்கள்

லாகூர் மாவட்டம் 10 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.

வருவாய் வட்டம்[10] பரப்பளவு

(km²)[11]

மக்கள் தொகை

(2023)

மக்கள்தொகை அடர்த்தி

(ppl/km²)

(2023)

எழுத்தறிவு %

(2023)[12]

ஒன்றியக் குழுக்கள்
லாகூர் இராணுவப் பாசறை வட்டம் 466 1,885,098 4,045.27 81.01% ...
லாகூர் நகர வட்டம் 214 4,123,354 19,268.01 80.36% ...
மாதிரி நகர வட்டம் 353 3,244,906 9,192.37 78.94% ...
ராய்விந்த் வட்டம் 467 1,080,637 2,314.00 72.35% ...
சாலிமார் வட்டம் 272 2,670,140 9,816.69 81.21% ...
நிஷ்தார் நகர வட்டம் ... ... ... ... ...
வாகா வட்டம் ... ... ... ... ...
இக்பால் நகர வட்டம் ... ... ... ... ...
ராவி நகர வட்டம் ... ... ... ... ...
சத்தார் லாகூர் வட்டம் ... ... ... ... ...

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "TABLE 1 : HOUSEHOLDS, POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE" (PDF). www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics. 2023.
  2. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
  3. "Towns and Unions in the City District of Lahore". National Reconstruction Bureau, Government of Pakistan website. Archived from the original on 9 February 2012. Retrieved 3 July 2023.
  4. "Lahore District". Digital South Asia Library, University of Chicago website. Retrieved 3 July 2023.
  5. 5.0 5.1 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
  6. "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
  7. "7th Population and Housing Census - Detailed Results: Table 5" (PDF). Pakistan Bureau of Statistics.
  8. "Population by Sex, Religion and Rural/Urban, Census-2023" (PDF). Pakistan Bureau of Statistics. 2023. Retrieved 2 Aug 2024.
  9. "Population by Sex, Mother Tongue and Rural/Urban, Census-2023" (PDF). Pakistan Bureau of Statistics. 2023. Retrieved 2 Aug 2024.
  10. Divisions/Districts of Pakistan பரணிடப்பட்டது 2006-09-30 at the வந்தவழி இயந்திரம் Note: Although divisions as an administrative structure has been abolished, the election commission of Pakistan still groups districts under the division names
  11. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
  12. "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023" (PDF).
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya