காசிப்பாளையம் (கோபி)
காசிப்பாளையம் (கோபி) (ஆங்கிலம்:Kasipalayam (Gopi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அமைவிடம்ஈரோடு - சத்தியமங்கலம் சாலையில் அமைந்த காசிப்பாளையம் பேரூராட்சிக்கு 50 கி.மீ. தொலைவில், ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் கோபிச்செட்டிப்பாளையம் 9 கி.மீ.; மேற்கில் சத்தியமங்கலம் 11 கி.மீ.; வடக்கில் தூக்கநாயக்கன்பாளையம் 17 கி.மீ.; தெற்கில் நம்பியூர் 15 கி.மீ. தொலைவில் உள்ளன. பேரூராட்சியின் அமைப்பு8.47 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 10 குக்கிராமங்களும், 67 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,838 வீடுகளும், 9,093 மக்கள்தொகையும் கொண்டது. [4] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia