திருப்பத்தூர் தொடருந்து நிலையம்
திருப்பத்தூர் தொடருந்து நிலையம் (Tiruppattur railway station, நிலையக் குறியீடு:TPT) ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டில், திருப்பத்தூர் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[2] இது தென்னக இரயில்வே மண்டலத்தின், சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் இந்த நிலையம் அமைந்துள்ளது. இது மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இணைப்பாக உள்ளது. இருப்பிடம் மற்றும் தளவமைப்புஇந்த தொடருந்து நிலையமானது, இரயில்வே காலனிக்கு அருகில் அமைந்துள்ளது. இதற்கு அருகிலேயே திருப்பத்தூா் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையம் பெங்களூரிலிருந்து 172 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வழித்தடங்கள்ஜோலார்பேட்டை சந்திப்பு, சேலம் சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு போன்ற இடங்களுடன் சென்னையை இணைக்கும் வழித்தடமாக, இந்த நிலையம் அமைந்துள்ளது.
திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [3][4][5][6] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சேலம் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, திருப்பத்தூர் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[7][8][9][10][11][12] ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia