சோழவந்தான் தொடருந்து நிலையம்
சோழவந்தான் தொடருந்து நிலையம் (Sholavandan railway station, நிலையக் குறியீடு:SDN) இந்தியாவின் தமிழ்நாட்டின், மதுரை மாவட்டத்திலுள்ள, சோழவந்தானில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது இந்திய இரயில்வேயின், தென்னக இரயில்வே மண்டலத்தின் கீழ் இயங்குகிறது. அமைவிடம்மதுரைக்கு வடமேற்கே 16 மைல் தொலைவில் உள்ள வைகை ஆற்றின் இடது கரையில் சோழவந்தன் அமைந்துள்ளது. சோழவந்தன் தொடருந்து நிலையத்தில் அனைத்து பயணிகள் தொடருந்துகளும், மதுரை - பெங்களூர் விரைவுத் தொடருந்து, வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி, மற்றும் நெல்லை அதிவிரைவு வண்டியும் நின்று செல்கிறது.[1][2] அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள்
இந்நிலையத்திலிருந்து 34.5 கிலோமீட்டர் (21.4 மைல்) தொலைவில் உள்ள மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் அருகிலுள்ள வானூர்தி நிலையமாகும். வழித்தடங்கள்இந்நிலையத்திலிருந்து இரண்டு வழித்தடங்கள் செல்கின்றன: சென்னை மற்றும் பெங்களூர் வழியாக வடக்கே ஒற்றை அகலப்பாதை மற்றும் மதுரை மற்றும் கன்னியாகுமரி வழியாக தெற்கே ஒற்றை அகலப்பாதை செல்கிறது. திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [3][4][5][6][7] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மதுரை தொடருந்து கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, சோழவந்தான் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 6.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [8][9][10][11][12][13] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia