திருவள்ளூர் தொடருந்து நிலையம்
திருவள்ளூர் தொடருந்து நிலையம் ஆனது சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்–அரக்கோணம் பிரிவில் சென்னை புறநகரைச் சேர்ந்த நிலையம் ஆகும். இது ஒரு நிலையங்களின் முனைய நெட்வொர்க், இங்கு சில புறநகர் ரயில்கள் நின்றும்,தொடன்கியும் செல்கிறது. இந்நிலையம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மேற்கே 41 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்தின் மேலே 47.46 மீ நிலைகொண்டுள்ளது. வரலாறுதிருவள்ளூர் மின்வசதிப் பாதை 29 நவம்பர் 1979 முதல் சென்னை சென்ட்ரல்–திருவள்ளூர் பிரிவு மின்மய உதவியுடன் மின்மயமாக்கப்பட்டது , .[1] போக்குவரத்து201ன நிலவரப்படி, இந்நிலையம் ஒரு நாளைக்கு சுமார் 100,000 பயணிகளைக் கையாண்டுள்ளது.[2]
திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [3][4][5][6] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சென்னை தொடருந்து கோட்டத்தில் 17 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, திருவள்ளூர் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 28.82 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[7][8][9][10][11] மேலும் பார்க்ககுறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia