சென்னைக் கடற்கரை தொடருந்து நிலையம்
அமைவிடம்சென்னை நகரின் கிழக்கு பகுதியில் சென்னை கடற்கரை இரயில் நிலையம் அமைந்துள்ளது. துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்கரையை இப்பாதை அடைகிறது. வரலாற்று சிறப்பு மிக்க ஜார்ஜ் டவுன் இதன் அருகில் அமைந்துள்ளது. இந்த இரயில் நிலையம் வடக்கு மற்றும் தெற்கு பாதைகளை ஒன்றிணைக்கும் இடமாகவும் செயல்படுகிறது. சென்னை புறநகர் ரயில்வே வலையமைப்பின், மையப் புள்ளியாக அமைகிறது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, இந்நிலையம் 21 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கில் இராஜாஜி சாலையும், கிழக்கில் சென்னை துறைமுகம் போன்றவை இவ்வளாகத்திற்கு எல்லையாக உள்ளன. பிரதான நுழைவாயில் இராஜாஜி சாலையில் பொது தபால் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது. இந்த நிலையம் சென்னை துறைமுகத்துடன் ஒரு நடை பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. வசதிகள்இந்நிலையத்தில் இரண்டு நடை பாலங்கள் உள்ளன. வடக்கு மற்றும் தெற்கு முனைகளில், தலா ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. எட்டாவது நடைமேடையின் வழியாக நான்காவது நடை மேடையை இப்பாலங்கள் இணைக்கின்றன. தெற்கு முனையிலுள்ள கால் நடை பாலம் சென்னை துறைமுகம் வரை நீண்டு, துறைமுகத்தை ரயில் நிலையத்துடன் இணைக்கிறது.[2] பின்னர் இராஜாஜி சாலையின் மேற்கு புறத்திலும் நடைபாலம் நீட்டிக்கப்பட்டது. இரயில்வே திட்டத்தின் கீழ் பொது நிதியில் இருந்து பத்து முன்பதிவு செய்யும் இடங்கள் மற்றும் ஒரு பெரிய பார்வையாளர் மண்டபம் கொண்ட புதிய இட ஒதுக்கீடு மையம் போன்றவை 2013 இல் கட்டப்பட்டன.[3] திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [4][5][6][7] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சென்னை தொடருந்து கோட்டத்தில் 17 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, சென்னைக் கடற்கரை தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 14.58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[8][9][10][11][12] சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia