பொம்மிடி தொடருந்து நிலையம்பொம்மிடி தொடருந்து நிலையம் (Bommidi Railway Station, நிலையக் குறியீடு:BQI) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள, தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயால் நிருவகிக்கப்படுகிறது. இருப்பிடம்இந்த நிலையமானது சேலம் சந்திப்பு தொடருந்து நிலையம் - ஜோலார்பேட்டை சந்திப்பு தொடருந்து நிலையம் வழித்தடத்தில் உள்ளது. வரலாறுபொம்மிடி தொடருந்து நிலையமானது 1867 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. அருகில் உள்ள ஏற்காடு மலையில் விளையும் காப்பி, மிளகு, மரங்கள் போன்ற வேளாண் பொருட்களை நாட்டின் பிற இடங்களுக்கு கொண்டு செல்ல இந்த நிலையம் பயன்படுத்தப்பட்டது. திட்டங்களும் மேம்பாடும்இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். ஒன்றிய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[1][2][3][4][5][6] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் பொம்மிடி தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[7] வசதிகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia