தும்பாட் மக்களவைத் தொகுதி
தும்பாட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tumpat; ஆங்கிலம்: Tumpat Federal Constituency; சீனம்: 道北联邦选区) என்பது மலேசியா, கிளாந்தான், தும்பாட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P019) ஆகும்.[7] தும்பாட் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1959-ஆம் ஆண்டில் இருந்து தும்பாட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. தும்பாட் மாவட்டம்தும்பாட் நகரம் தாய்லாந்து எல்லையில் கிளாந்தான் மாநிலத்தின் வடக்கில் உள்ளது. இந்த நகரத்தின் மேற்கில் கோலோக் ஆறு; கிழக்கில் கிளாந்தான் ஆறு; தெற்கில் பாசீர் மாஸ், கோத்தா பாரு; மேற்கில் தாய்லாந்து தாக் பாய் மாவட்டம் (Tak Bai District) ஆகியவை உள்ளன. தும்பாட் நகரம் கிளாந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாரு நகரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மலேசியக் கிழக்கு கடற்கரை தொடருந்து சேவையின் (East Coast Line Malaysia) இறுதி முனையில் அமைந்துள்ளது. 2022-ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, தும்பாட் மாவட்டத்தின் மக்கள்தொகை ஏறக்குறைய 183,100. பெரும்பான்மையான மக்கள் மலேசிய மலாயர் ஆவர். குறிப்பிடத்தக்க அளவில் மலேசிய சயாமியர் (Malaysian Siamese); மலேசிய இந்தியர் மற்றும் மலேசிய சீனர் வாழ்கின்றனர். தும்பாட் மக்களவைத் தொகுதி
தும்பாட் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
தும்பாட் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia