ரந்தாவ் பாஞ்சாங் மக்களவைத் தொகுதி
ரந்தாவ் பாஞ்சாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Rantau Panjang; ஆங்கிலம்: Rantau Panjang Federal Constituency; சீனம்: 兰斗班让国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், பாசிர் மாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P023) ஆகும்.[8] ரந்தாவ் பாஞ்சாங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1974-ஆம் ஆண்டில் இருந்து ரந்தாவ் பாஞ்சாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9] ரந்தாவ் பாஞ்சாங்ரந்தாவ் பாஞ்சாங் நகரம் கிளாந்தான் மாநிலத்தில், பாசிர் மாஸ் மாவட்டத்தில் (Pasir Mas District) அமைந்துள்ள நகரம். மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 39 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ரந்தாவ் பஞ்சாங் நகரின் வடக்குப் பகுதியில் கோலோக் ஆறு ஓடுகிறது. இந்தக் கோலோக் ஆறுதான் தாய்லாந்து; மலேசியா நாடுகளின் எல்லையாகவும் அமைகின்றது.[10] இந்த நகரம் பல்வேறு வகையான விற்பனை பொருட்கள் மற்றும் நினைவு பரிசுப் பொருள்களுக்குப் பிரபலமானது. மலேசியாவின் தாய்லாந்து எல்லைத் தொடர்பான அரசாங்க அலுவலகங்கள் பெரும்பாலும் இங்குதான் உள்ளன. ரந்தாவ் பாஞ்சாங் முக்கிம்கள்
ரந்தாவ் பாஞ்சாங் மக்களவைத் தொகுதி
ரந்தாவ் பாஞ்சாங் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
ரந்தாவ் பாஞ்சாங் வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia