பாசிர் பூத்தே மக்களவைத் தொகுதி
பாசிர் பூத்தே மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pasir Puteh; ஆங்கிலம்: Pasir Puteh Federal Constituency; சீனம்: 巴西富地国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், பாசிர் பூத்தே மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P028) ஆகும்.[8] பாசிர் பூத்தே மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1959-ஆம் ஆண்டில் இருந்து பாசிர் பூத்தே மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9] பாசிர் பூத்தேபாசிர் பூத்தே நகரம் கிளாந்தான் மாநிலத்தின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. மாநிலத் தலைநகர் கோத்தா பாருவின் தெற்கே சுமார் 30 கி.மீ. தொலைவில் செமாராக் ஆற்றின் (Semerak River) கரையில் பாசிர் பூத்தே நகரம் அமைந்துள்ளது. அதே வேளையில் பாசிர் பூத்தே மாவட்டம் திராங்கானு மாநிலத்தின் தென்கிழக்கில் எல்லையாக உள்ளது. பாசிர் பூத்தே வரலாறுஇந்த நகரம் பாசிர் பூத்தே என்று அழைக்கப் படுவதற்கு முன்பு, பங்காலான் லிம்போங்கான் (Pangkalan Limbungan) என்று அழைக்கப்பட்டது. கிளாந்தான் சுல்தான் நான்காம் முகமது (Sultan Muhammad IV) இங்கு வருகை தந்த பிறகு, பாசிர் பூத்தே நகரம் அதன் தற்போதைய பெயரைப் பெற்றது. செமாராக் ஆற்றின் கரையோரங்களில் பளபளக்கும் வெண்மணலைப் பார்த்து சுல்தான் முகம்மது ஈர்க்கப் பட்டார். 1911-ஆம் ஆண்டில், சுல்தான் இந்த இடத்தின் பெயரை பாசிர் பூத்தே என்று அறிவித்தார். பாசீர் பூத்தே என்பது ஒரு மலாய்ச் சொல். வெள்ளை மணல் என்று பொருள். பாசிர் பூத்தே மக்களவைத் தொகுதி
பாசிர் பூத்தே மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
பாசிர் பூத்தே வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia