தானா மேரா மக்களவைத் தொகுதி
தானா மேரா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Ketereh; ஆங்கிலம்: Ketereh Federal Constituency; சீனம்: 格底里国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், தானா மேரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P027) ஆகும்.[8] தானா மேரா மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1959-ஆம் ஆண்டில் இருந்து தானா மேரா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9] தானா மேரா மாவட்டம்தானா மேரா மாவட்டம் கிளாந்தான் மாநிலத்தின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். தானா மேரா நகர்ப்புறப் பகுதி கிளாந்தான் ஆற்றின் வழியாக அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் வடக்கில் பாசீர் மாஸ் மாவட்டம்; கிழக்கில் மாச்சாங் மாவட்டம்; தென் கிழக்கில் கோலா கிராய் மாவட்டம்; தென் மேற்கில் ஜெலி மாவட்டம்; ஆகிய மாவட்டங்கள் உள்ளன. தாய்லாந்து நாடு மேற்கில் உள்ளது. சேது ரக்தமரிதிகா சிற்றரசுசேது ரக்தமரிதிகா எனும் ஒரு சிற்றரசு முன்னர் காலத்தில் தானா மேரா மாவட்டத்தில் இருந்தது. அந்த அரசு சீனா, சாம்பா, பூனான், ஜாவா, சுமத்திரா, மியன்மார், தென்னிந்தியா போன்ற நாடுகளுடன் வணிகம் செய்த அரசு ஆகும்.[10] சேது ரக்தமரிதிகா சிற்றரசிற்குச் சிவந்த மண் சிற்றரசு (Red Earth Kingdom) என்று மற்றொரு பெயரும் உள்ளது. அதனால் அந்தச் சிற்றரசை மலாய் மொழியில் தானா மேரா (Tanah Merah) என்று அழைத்தார்கள்.[11] கிளாந்தான் தானா மேரா மாவட்டத்திற்கு சேது ரக்தமரிதிகா சிற்றரசில் இருந்து தான் பெயர் வைக்கப்பட்டது. தானா மேரா மக்களவைத் தொகுதி
தானா மேரா மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
தானா மேரா வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia