மாச்சாங் மக்களவைத் தொகுதி
மாச்சாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Machang; ஆங்கிலம்: Machang Federal Constituency; சீனம்: 巴西富地国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், மாச்சாங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P029) ஆகும்.[8] மாச்சாங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1974-ஆம் ஆண்டில் இருந்து மாச்சாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9] மாச்சாங்மாச்சாங் நகரம் கிளாந்தான் மாநிலத்தின் வட கிழக்குப் பகுதியில்; மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 44 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 298 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. குதிரை மாம்பழம் என்று அழைக்கப்படும் மாச்சாங் மாம்பழம் (Mangifera foetida) என்பதன் மலாய்ப் பெயரில் இருந்து இந்த இடத்திற்கு மாச்சாங் என்று பெயரிடப்பட்டது.[10] மாச்சாங் எனும் பெயரில் கம்போங் மாச்சாங் (Kampung Machang) எனும் கிராமம் உள்ளது. 1880-ஆம் ஆண்டில் செனிக் அவாங் கெச்சிக் (Senik Awang Kecik) என்பவரின் தலைமையில் குடியேறிய ஒரு குழுவினரால் கம்போங் மாச்சாங் எனும் கிராமம் உருவாக்கப்பட்டது. கில்மார்ட் பாலம்கிளாந்தான் ஆற்றின் குறுக்கே தானா மேராவுக்கு அருகில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தொடருந்துப் பாலம் உள்ளது. அதன் பெயர் கில்மார்ட் பாலம் (Guillemard Bridge). இந்தப் பாலம் மலேசியாவிலேயே மிக நீளமான தொடருந்துப் பாலமாகும். மலாயா மீதான ஜப்பானிய படையெடுப்பின் போது, சப்பானிய இராணுவத் துருப்புக்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக, 1941 டிசம்பர் 12-ஆம் தேதி பிரித்தானியத் துருப்புக்களால் இந்தத் தொடருந்துப் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது. பின்னர் இந்தத் தொடருந்துப் பாலம் விரைவில் பழுதுபார்க்கப்பட்டு, 1948 செப்டம்பர் 7-ஆம் தேதி போக்குவரத்திற்கு மீண்டும் திறக்கப்பட்டது. மாச்சாங் மக்களவைத் தொகுதி
மாச்சாங் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
மாச்சாங் வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia