கோலா கிராய் மக்களவைத் தொகுதி
கோலா கிராய் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kuala Krai; ஆங்கிலம்: Kuala Krai Federal Constituency; சீனம்: 瓜拉吉赖国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், கோலா கிராய் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P031) ஆகும்.[8] கோலா கிராய் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1974-ஆம் ஆண்டில் இருந்து கோலா கிராய் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9] கோலா கிராய் மாவட்டம்கோலா கிராய் மாவட்டம், கிளாந்தான் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு மாவட்டம் ஆகும். 1940-ஆம் ஆண்டுகளில் பிரித்தானியர்களின் பாதுகாப்பில் இருந்த போது கோலா லெபிர் (Kuala Lebir) என்று அழைக்கப்பட்டது. இந்த மாவட்டம் கடல் மட்டத்தில் இருந்து 53 மீட்டர் (177 அடி) உயரத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோலா கிராய் [10] வெள்ளப் பெருக்குமுற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட கோலா கிராய் மாவட்டம்; கிளந்தான் மாநிலத்தின் மையத்தில் உள்ளது. மலைப்பாங்கான இந்த மாவட்டம் 20-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு, அதன் முழுப் பகுதியும் வெப்பமண்டல மழைக்காடாக இருந்தது. இப்பகுதியில் இரண்டு பெரிய ஆறுகள் உள்ளன. லெபிர் ஆறு; மற்றும் கலாஸ் ஆறு. இந்த ஆறுகளும் ஒன்றிணைந்து கிளாந்தான் ஆறு (Kelantan River) எனும் ஒரு பெரிய ஆற்றை உருவாக்குகின்றன. பின்னர் இந்த கிளாந்தான் ஆறு 70 கி.மீ. வடக்கு நோக்கிப் பாய்ந்து; மாநிலத்தின் தலைநகரமான கோத்தா பாருவிற்கு அருகில் தென்சீனக் கடலில் சேர்கிறது. 2014-ஆம் ஆண்டு பா குனிங் (Bah Kuning) எனப்படும் கிளாந்தான் பெரும் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கோலா கிராய் மாவட்டமும் ஒன்றாகும். இதன் விளைவாக சொத்து இழப்புகள் அதிகம் ஏற்பட்டது; அத்துடன் மலேசிய மத்திய அரசு அவசரகால நிலையையும் அறிவித்தது. கோலா கிராய் மக்களவைத் தொகுதி
கோலா கிராய் தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia