பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதி
பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pasir Mas; ஆங்கிலம்: Pasir Mas Federal Constituency; சீனம்: 巴西马国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், பாசிர் மாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P022) ஆகும்.[6] பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1955-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1955-ஆம் ஆண்டில் இருந்து பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7] பாசிர் மாஸ்பாசிர் மாஸ் நகரம் கிளாந்தான் மாநிலத்தில்; பாசிர் மாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 14 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 434 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பாசிர் மாஸ் கிளாந்தான் மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரமாகும். 1918-ஆம் ஆண்டில், பாசிர் மாஸ் நகரமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கோத்தா பாரு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப் பட்டன. பின்னர் அந்தப் பகுதிகளுக்கு என பாசிர் மாஸ் மாவட்டம் உருவாக்கப்பட்டது.[8] பாசிர் மாஸ் மாவட்டம்பாசிர் மாஸ் நகரம் தாய்லாந்து நாட்டு எல்லைக்கு மிக அருகில் உள்ளது. அத்துடன் பாசிர் மாஸ் மாவட்டத்தின் நிர்வாக மையமாகவும் விளங்குகிறது.பாசிர் மாஸ் நகரத்தில் ஒரு தொடருந்து நிலையம் உள்ளது. அதன் பெயர் பாசிர் மாஸ் தொடருந்து நிலையம். இந்த நிலையம் கிம்மாஸ், குவா மூசாங், தும்பாட் ஆகிய நகரங்களை இணைக்கிறது. பாசிர் மாஸ் மாவட்டத்தின் முக்கிய நகரம்; மற்றும் நிர்வாக மையம் பாசீர் மாஸ் நகரம் ஆகும்.[9] இந்த மாவட்டத்தின் வடக்கில் தும்பாட் மாவட்டம் (Tumpat District); கிழக்கில் கோத்தா பாரு மாவட்டம் (Kota Bharu District); தெற்கில் தானா மேரா மாவட்டம் (Tanah Merah District); மற்றும் தாய்லாந்து நாட்டின் சுங்கை கோலோக் மாவட்டம் ஆகிய நிலப்பகுதிகள் எல்லைகளாக உள்ளன. பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதி
பாசிர் மாஸ் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
பாசிர் மாஸ் வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia