குபாங் கிரியான் மக்களவைத் தொகுதி
குபாங் கிரியான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kubang Kerian; ஆங்கிலம்: Kubang Kerian Federal Constituency; சீனம்: 古邦阁亮国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், கோத்தா பாரு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P024) ஆகும்.[8] குபாங் கிரியான் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1995-ஆம் ஆண்டில் இருந்து குபாங் கிரியான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9] குபாங் கிரியான்குபாங் கிரியான் நகரம் கிளாந்தான் மாநிலத்தில், கோத்தா பாரு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இந்த நகரம் கிளாந்தான் மாநிலத்தின் அரச நகரமும் ஆகும்.[10] கிளாந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 5 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 445 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சுல்தான் இசுமாயில் பெட்ரா பள்ளிவாசல்இந்த நகரில் கிளாந்தான் சுல்தான் அரண்மனை உள்ளது. அத்துடன் அந்த அரண்மனை கிளாந்தான் சுல்தான் ஐந்தாம் முகமது அவர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் உள்ளது. குபாங் கிரியானில் பெரும்பான்மையானவர்கள் முசுலீம்கள். இதனால் ஏராளமான பள்ளிவாசல்கள் உள்ளன. மிகப்பெரிய பள்ளிவாசல் சுல்தான் இசுமாயில் பெட்ரா பள்ளிவாசல் (Sultan Ismail Petra Mosque) ஆகும். இந்தப் பள்ளிவாசல் நீலப் பள்ளிவாசல் (Blue Mosque) என்றும் அழைக்கப்படுகிறது. குபாங் கிரியான் மக்களவைத் தொகுதி
குபாங் கிரியான் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
குபாங் கிரியான் வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia