பாச்சோக் மக்களவைத் தொகுதி
பாச்சோக் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bachok; ஆங்கிலம்: Bachok Federal Constituency; சீனம்: 万捷国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், பாச்சோக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P025) ஆகும்.[8] பாச்சோக் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1959-ஆம் ஆண்டில் இருந்து பாச்சோக் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9] பாச்சோக்பாச்சோக் நகரம் கிளாந்தான் மாநிலத்தில், பாச்சோக் மாவட்டத்தில் (Bachok District) அமைந்துள்ள நகரம். மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. மாவட்டத்தின் பெயரும் பாச்சோக் ஆகும். மலாய் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். சீனர் மற்றும் சயாமியர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இசுலாமிய சுற்றுலா நகரம்பாச்சோக் நகரமும்; கிளாந்தான் மாநிலமும் தாய்லாந்து நாட்டுக்கு மிக அருகில் இருப்பதால் தாய்லாந்து நாட்டின் மொழி, பண்பாட்டுத் தாக்கங்களும் இங்கு அதிகமாக உள்ளன. கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பாச்சோக் நகரம்; பாச்சோக் மாவட்டத்தின் நிர்வாகம், வணிகம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றின் மையமாகும்.[10] இந்த நகரத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் வேளாண்மை சார்ந்தது. குறிப்பிடத்தக்க அளவிற்கு மீன்பிடித் தொழிலும் உள்ளது. பாச்சோக் நகரம் அல்லது பண்டார் பச்சோக் (Bandar Bachok) அண்மையில் இசுலாமிய சுற்றுலா நகரமாக (Islamic Tourism Town) அறிவிக்கப்பட்டது. பாச்சோக் மக்களவைத் தொகுதி
பாச்சோக் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
பாச்சோக் வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia