தொல்காப்பியப் பூங்கா
தொல்காப்பியப் பூங்கா அல்லது அடையாறு பூங்கா தமிழக அரசால் அடையாற்றில் திறக்கப்பட்டுள்ள பூங்காவாகும். இப்பூங்காவில் பல வகையான தாவர வகைகள் உள்ளன. இப்பூங்காவிற்கு பழந்தமிழ் நூல் இயற்றிய தமிழ்ப் புலவர் தொல்காப்பியரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பறவைகளையும் இங்கு காணலாம். பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் நீர்நிலைகளாக உள்ளன. இப்பூங்காவை மு. கருணாநிதி திறந்து வைத்தார். சுற்றுச்சூழல், நீர் மேலாண்மை குறித்து அறிய, பூங்கா திறந்த சில மாதங்களிலேயே நான்காயிரம் பள்ளிக் குழந்தைகள் பார்வையிட்டுச் சென்றனர். பறவைகளும் விலங்குகளும்இருநூறு வகை அரிய பறவைகள் இருப்பதாக அறியப்பட்டாலும் பெரும்பாலானவை அழிவின் விளிம்பில் உள்ளன. தவளை, குருவி, மைனா, வண்ணத்துப்பூச்சி போன்ற வகை வகையான உயிரினங்களை இங்கு காணலாம். சில இடங்களில் மட்டுமே காணக்கூடிய அரிய வகை விலங்குகளும் பறவைகளுங்கூட இங்கு உள்ளன. பார்வையாளர்களுக்காகஇப்பூங்கா பொது மக்களுக்காக ஆண்டு முழுவதும் திறந்தே இருக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் மூடப்பட்டிருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்க்க அனுமதிக்கப் படுவர். பள்ளி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுடன் இங்கு வர விரும்பினால் அவர்கள் ஐந்து ரூபாய் வீதம் செலுத்த வேண்டும்.[1] எழில்மிகு காட்சிகள்
மேலும் பார்க்கஉசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia