வல்சாடு மாவட்டம்
![]() வல்சாடு மாவட்டம் (Valsad district) இந்தியாவின், குசராத்து மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இது தெற்கு குசராத்தில் அமைந்துள்ளது. இதன் தலைமையிடம் வல்சாடு நகரம். வல்சாடு மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 5,244 சதுர கிலோ மீட்டர்கள். இம்மாவட்டம் மாம்பழம், சப்போட்டா பழம், தேக்கு மரம் மற்றும் வேதியியல் தொழிற்சாலைகளுக்குப் பெயர் பெற்றது. உட்பிரிவுகள்இம்மாவட்டம் ஐந்து வட்டங்களைக் கொண்டுள்ளது. அமைவிடம்வடக்கே நவ்சாரி மாவட்டம், கிழக்கே நாசிக் மாவட்டம், மகாராஷ்டிர மாநிலம், தெற்கே பால்கர் மாவட்டம், மாகாராஷ்டிர மாநிலம், மேற்கே அரபுக் கடல் எல்லைகளாகக் கொண்டு அமைந்துள்ளது..[1] பொருளாதாரம்வேளாண்மைமா, வாழை, கரும்பு, சுரைக்காய், நவதானியங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. தொழில்கள்வேதியல் பொருட்கள், மருந்துகள், துணி மற்றும் நூல், காகித தொழிற்சாலைகள் அதிகம் கொண்டது. இம்மாவட்டம் தோட்டக்கலைக்கு மையமாக திகழ்கிறது. மேலும் சிறு, குறுந்தொழிற்சாலைகள் அதிகம் கொண்டது. மக்கள் வகைப்பாடு2011ஆம் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, வல்சாடு மாவட்ட மக்கட்தொகை 1,703,068 ஆகவும்,.[2][2] மக்களடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 561 நபர்கள் என்ற அளவிலும்,[2] பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 926 பெண்கள் என்ற அளவிலும், எழுத்தறிவு விகிதம் 80.94% ஆகவும் உள்ளது.,[2][2] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia