புக்கிட் பெண்டேரா மக்களவைத் தொகுதி
புக்கிட் பெண்டேரா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bukit Bendera; ஆங்கிலம்: Bukit Bendera Federal Constituency; சீனம்: 武吉班德拉联邦选区) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் (Northeast Penang Island District District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P048) ஆகும்.[3] புக்கிட் பெண்டேரா மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1974-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து புக்கிட் பெண்டேரா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), புக்கிட் பெண்டேரா மக்களவைத் தொகுதி 30 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[4] பொதுபினாங்கு மலைபினாங்கு மாநிலத்தின் ஜார்ஜ் டவுன், பினாங்கு தலைநகர் மையத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. மலேசியாவின் முதல் மலைவாழிடம் என்று அழைக்கப்படும் பினாங்கு மலையை, பிரான்சிஸ் லைட் கண்டுபிடித்தார். செம்புற்றுப் பழத் தோட்டங்களை உருவாக்குவதற்காக, பினாங்கு மலையின் உச்சிக்குச் சென்ற போது, இந்த மலைவாழிடம் கண்டுபிடிக்கப்பட்டது.[5] பினாங்கு கொடி மலை கருங்கல் சார்ந்த ஓர் நிலப்பகுதியாகும். இந்த மலை வடக்குப் பகுதியில் உயரமாகச் செல்கிறது. வெஸ்டர்ன் ஹில் என்று அழைக்கப்படும் மேற்கு மலைப் பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து 833 மீட்டர் (2,723 அடி) வரை உயரமாக இருக்கிறது. மேற்கு மலைப் பகுதியில் சில உச்சி மலைகளும் உள்ளன.[6] விடுமுறை ஓய்வுத் தளம்பினாங்கு கொடி மலையில் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவுவதால், அது ஒரு விடுமுறை ஓய்வுத் தளமாகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. கொடி மலைக்கு அருகிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் நூற்றாண்டு கால வளமனைகள் இன்னும் உள்ளன. அந்த மலையின் வடக்கு பகுதியில் மட்டும் மேம்பாடுகள் தெரிகின்றன. அரசாங்க மலை, புக்கிட் தீமா போன்ற மலைப்பகுதிகள் நீர்ப் பிடிப்பு வளாகங்களாகும். அதனால், இந்த இடங்களில் மேம்பாட்டுத் திட்டங்கள் எதுவும் அனுமதிக்கப் படுவது இல்லை. கொடிமலை தொடருந்து சேவைஆயர் ஈத்தாம் மலையடிவாரத்தில் இருந்து, 2007 மீட்டர் உயரத்தில் உள்ள கொடிமலை உச்சிக்கு கயிற்றிழுவை இருப்புப் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. கொடி மலையின் உச்சிக்குச் செல்ல, இரயில் சேவையைப் பயன்படுத்துவதே வசதியாகும். 2010-ஆம் ஆண்டு, கொடிமலை தொடருந்து சேவையின் புதிய மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன. அந்த மேம்பாட்டுப் பணிகள் முடிவுற்றதும், 2011-ஆம் ஆண்டு மே மாதம் முற்றிலும் புதிய முறையிலான இரயில் சேவை முறை அமல்படுத்தப்பட்டது. முன்பு காலத்தில், பயணத்தின் முதல் பாதியை ஓர் இரயிலும், மறு பாதியை மற்றோர் இரயிலிலும் மாறி மாறிப் பயணிக்க வேண்டும். இப்போதைய புதிய முறையில், ஒரே இரயிலில் கொடிமலையின் உச்சியை அடையும் வகையில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.[7] புக்கிட் பெண்டேரா வாக்குச் சாவடிகள்2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), புக்கிட் பெண்டேரா மக்களவைத் தொகுதி 30 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[8]
புக்கிட் பெண்டேரா மக்களவைத் தொகுதி
புக்கிட் பெண்டேரா தேர்தல் முடிவுகள்
புக்கிட் பெண்டேரா வேட்பாளர் விவரங்கள்
புக்கிட் பெண்டேரா சட்டமன்ற தொகுதிகள்
புக்கிட் பெண்டேரா சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)
மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia