புக்கிட் மெர்தாஜாம் மக்களவைத் தொகுதி
புக்கிட் மெர்தாஜாம் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bukit Mertajam; ஆங்கிலம்: Bukit Mertajam Federal Constituency; சீனம்: 大山脚联邦选区) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் (Central Seberang Perai District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P045) ஆகும்.[3] புக்கிட் மெர்தாஜாம் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1974-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து புக்கிட் மெர்தாஜாம் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), புக்கிட் மெர்தாஜாம் மக்களவைத் தொகுதி 28 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[4] பொதுபுக்கிட் மெர்தாஜாம் நகரம்மலேசியாவில் தமிழர்கள் வரலாற்றுத் தடம் பதித்த முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்றாகும். 1900-ஆம் ஆண்டுகளில் இங்கு வாழ்ந்த தமிழர்கள் இந்த நகரத்தை சுங்குரும்பை என்று அழைத்தார்கள். சுங்கை (Sungei) என்றால் மலாய் மொழியில் ஆறு; ரும்பை (Rumbai) என்றால் உயர்ந்த வகை வாசனைச் செடி. இத்தகைய வாசனைச் செடிகள் ஆற்றங்கரை ஓரங்களில் அதிகமாக இருந்ததால் சுங்குரும்பை என்று பெயராகியது. பிரித்தானியர்களும், சீனர்களும் புக்கிட் மெர்தாஜாம் என்று அழைத்தனர். மெர்தாஜாம் மலைபுக்கிட் மெர்தாஜாம் எனும் பெயர் மெர்தாஜாம் மலை எனும் பெயரில் இருந்து மருவியதாகச் சொல்லப் படுகிறது. மலாய் மொழியில் மெர்தாஜாம் என்றால் கூர்மை என்று பொருள். புக்கிட் மெர்தாஜாம் என்றால் கூர்மையான மலை என்று பொருள்.[5][6] மெர்தாஜாம் மலையின் உச்சிப் பாகம் மிக கூர்மையான நிலப்பரப்பைக் கொண்டு இருந்ததால் அதற்கு அந்தப் பெயர் வந்ததாகச் சொல்லப் படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், இந்து - பௌத்த சமயங்கள் கலந்த பூஜாங் பள்ளத்தாக்கு நாகரிகத்தின் ஒரு பகுதியாக புக்கிட் மெர்தாஜாம் பிரசித்தி பெற்று விளங்கி உள்ளது. இங்குதான் 1845-ஆம் ஆண்டில் செரோக் தெக்குன் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.[7] பூஜாங் பள்ளத்தாக்குஅந்தக் கல்வெட்டை ஒரு நினைவுச் சின்னமாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறார்கள். இப்போது கெடா என்று அழைக்கப்படும் கடாரத்தை, பூஜாங் பள்ளத்தாக்கு நாகரிகம், கி.பி 6-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்து உள்ளது. 1800-ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் செபராங் பிறை நிலப்பகுதியைக் கையகப்படுத்தியது. அதன் பின்னர் 19-ஆம் நூற்றாண்டில் புக்கிட் மெர்தாஜாம் உருவானது. அதற்கு முன்னர், இந்தப் பகுதியில் மலாய் மக்கள் மற்றும் சயாமிய விவசாயிகள் வசித்து வந்தார்கள்.[5] புக்கிட் மெர்தாஜாம் வாக்குச் சாவடிகள்2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதி 26 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[8]
புக்கிட் மெர்தாஜாம் மக்களவைத் தொகுதி
புக்கிட் மெர்தாஜாம் தேர்தல் முடிவுகள்
புக்கிட் மெர்தாஜாம் வேட்பாளர் விவரங்கள்
புக்கிட் மெர்தாஜாம் சட்டமன்ற தொகுதிகள்
புக்கிட் மெர்தாஜாம் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)
மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia