நிபோங் திபால் மக்களவைத் தொகுதி
நிபோங் திபால் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Nibong Tebal; ஆங்கிலம்: Nibong Tebal Federal Constituency; சீனம்: 高渊国会议席) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், தென் செபராங் பிறை மாவட்டத்தில் (Central Seberang Perai District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P047) ஆகும்.[3] நிபோங் திபால் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1974-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து நிபோங் திபால் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), நிபோங் திபால் மக்களவைத் தொகுதி 25 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[4] பொதுநிபோங் திபால் நகரம்நிபோங் திபால் (Nibong Tebal) நகரம், பினாங்கு மாநிலத்தில் மிகத் துரிதமாக வளர்ச்சி பெற்றுவரும் ஒரு நகரமாக அறியப்படுகிறது. இந்த நகரத்திற்கு அருகாமையில் பத்து காவான் நகரம்; பேராக் மாநிலத்தின் பாரிட் புந்தார் நகரம்; கெடா மாநிலத்தின் செர்டாங் நகரம் ஆகிய நகரங்கள் உள்ளன. இந்த நகரம் ஓர் அமைதியான நகரம். இந்த நகரத்தைச் சுற்றிலும் செம்பனைத் தோட்டங்கள் உள்ளன. முன்பு இந்தத் தோட்டங்கள் ரப்பர் தோட்டங்களாக இருந்தன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் அந்தத் தோட்டங்களில் வேலை செய்தனர். நிபோங் திபால் தமிழர்கள்நில மேம்பாட்டுத் திட்டங்களின் காரணமாக, அங்கு வேலை செய்த தமிழர்கள், வேறு இடங்களுக்கு மாறிச் சென்று விட்டனர். தோட்டப்புறங்களில் பிறந்து வளர்ந்த இளைய தலைமுறையினர், உயர்க்கல்வி பெற்றதும் நகர்ப் புறங்களுக்கு மாறிச் சென்றனர். சிலர் நிபோங் திபால் நகருக்கு அருகாமையில் உள்ள தொழில்பேட்டைகளில் வேலை செய்கின்றனர். இங்கு அதிகமாகச் சீனர்கள் வாழ்கின்றனர். நிபோங் திபால் நகரின் அருகில் கிரியான் ஆறு செல்கிறது. இந்த ஆறு மலாக்கா நீரிணையில் கலக்கிறது. ஆற்றின் முகத்துவாரத்தில் பல மீன்பிடி கிராமங்கள் உள்ளன. அங்கு பெரும்பாலும் மலாய்க்காரர்களும் சீனர்களும் வாழ்கின்றனர். நிபோங் திபால் வாக்குச் சாவடிகள்2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), நிபோங் திபால் மக்களவைத் தொகுதி 25 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[5]
நிபோங் திபால் மக்களவைத் தொகுதி
நிபோங் திபால் தேர்தல் முடிவுகள்
நிபோங் திபால் வேட்பாளர் விவரங்கள்
நிபோங் திபால் சட்டமன்ற தொகுதிகள்
நிபோங் திபால் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)
மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia