பாகான் மக்களவைத் தொகுதி
பாகான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bagan; ஆங்கிலம்: Bagan Federal Constituency; சீனம்: 蒲甘联邦选区) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், வட செபராங் பிறை மாவட்டத்தில் (North Seberang Perai District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P043) ஆகும்.[2] பாகான் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1959-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1959-ஆம் ஆண்டில் இருந்து பாகான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பாகான் மக்களவைத் தொகுதி 24 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[3] இந்தத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் சீரமைப்பின் காரணமாக நீக்கப்பட்டது. இருப்பினும் 1984-ஆம் ஆண்டில் மீண்டும் உருவாக்கப்பட்டது. பொதுவட செபராங் பிறை மாவட்டம்வட செபராங் பிறை மாவட்டம் (North Seberang Perai District) பினாங்கு மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் ஒரு மாவட்டம்; 267 சதுர கி. மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தின் வடக்கில் மூடா ஆறு செல்கிறது. இந்த ஆறு கெடா மாநிலத்தில் உள்ள கோலா மூடா மாவட்டம்; வட செபராங் பிறை மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களையும் பிரிக்கின்றது. கெப்பாலா பத்தாஸ்இந்த மாவட்டத்தின் தலைநகரம் கெப்பாலா பத்தாஸ். மாவட்டத்தின் மிகப்பெரிய நகரம் பட்டர்வொர்த். வடக்கு செபராங் பிறையில் அமைந்துள்ள பிற இடங்கள்: பெனாகா, பினாங்கு துங்கல், பெர்டா, தாசேக் குளுகோர், தெலுக் ஆயர் தாவார் மற்றும் மாக் மண்டின். பினாங்கு மாநிலத்தின் செபராங் பிறை பகுதியில் உள்ள மூன்று நிர்வாக மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும். இந்த வட செபராங் பிறை மாவட்டத்தில் பெரும்பாலும் நெல் பயிரிடப் படுகிறது. இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் நெல் வயல்களைக் கொண்டவை ஆகும். மாவட்ட எல்லைகள்
பாகான் தொகுதி வாக்குச் சாவடிகள்2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பாகான் மக்களவைத் தொகுதி 24 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[4]
பாகான் மக்களவைத் தொகுதி
பாகான் தேர்தல் முடிவுகள்
பாகான் வேட்பாளர் விவரங்கள்
பாகான் சட்டமன்ற தொகுதிகள்
பாகான் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)
மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia