ஹபிசாபாத் மாவட்டம்
ஹபிசாபாத் மாவட்டம் (Hafizabad District), பாக்கித்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் 41 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் ஹபிசாபாத் நகரம் ஆகும். ஹபிசாபாத் நகரமானது, பஞ்சாப் மாகாணத் தலைநகரான லாகூருக்கு வடமேற்கே 114 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்கிழக்கே 303 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மாவட்ட எல்லைகள்ஹபிசாபாத் மாவட்டத்தின் வடக்கில் வசீராபாத் மாவட்டம், வடகிழக்கில் குஜ்ரன்வாலா மாவட்டம், கிழக்கில் சேய்க்குப்புரா மாவட்டம், தென்கிழக்கில் நங்கானா சாகிபு மாவட்டம், வடமேற்கில் மண்டி பகாவுத்தீன் மாவட்டம், தென்மேற்கே சர்கோதா மாவட்டம், தெற்கில் சினியோத் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. தட்ப வெப்பம்கோடைக்காலத்தின் சூன் மாதத்திய அதிகபட்ச வெப்பம் 50 °C (122 °F) இருக்கும். குளிர்காலத்தில் இதமான குளிர் இருக்கும். மழைக்காலம் சூலை முதல் செப்டம்பர் வரை இருக்கும். வண்டல் மண் வளம் மாவட்டம் என்பதால் கொண்டதால் வேளாண்மை சிறப்பாக உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 197,206 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 1,319,909. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 103.11 ஆண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 65.77% ஆகும்.[3][4]இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 331,008 (25.08%) ஆக உள்ளனர்.[5]நகர்புறங்களில் 504,380 (38.21%) மக்கள் வாழ்கின்றனர்.[3] சமயங்கள்இம்மாவட்டத்தில் இசுலாம் சமயத்தை 98.97% மக்களும், கிறித்துவம் 0.69% மக்களும், பிற சமயங்களை 0.14% மக்களும் பின்பற்றுகின்றனர்.[6] மொழிகள்இம்மாவட்டத்தில் பஞ்சாபி மொழியை 95.74% மக்கலும், உருது மொழியை 3.16% மக்களும் தாய் மொழியாகப் பேசுகின்றனர்.[7] மாவட்ட நிர்வாகம்இரண்டு வருவாய் வட்டங்களைக் கொண்ட இம்மாவட்ட நிர்வாகி துணை ஆணையாளர் ஆவார்.
![]() மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia