மண்டி பகாவுத்தீன் மாவட்டம்
மண்டி பகாவுத்தீன் மாவட்டம் (Mandi Bahauddin), பாக்கித்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் 41 மாவட்டங்களில் ஒன்றாகும். பஞ்சாபில் வடக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மண்டி பகாவுத்தீன் நகரம் ஆகும். மண்டி பகாவுத்தீன் நகரமானது மாகாணத் தலைநகரான லாகூருக்கு வடமேற்கே 240 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்கிழக்கே 256 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மாவட்ட எல்லைகள்2,673 சதுர கிலோமீட்டர்கள் (1,032 sq mi) பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்திற்கு வடக்கே குஜராத் மாவட்டம், கிழக்கில் வசீராபாத் மாவட்டம் மற்றும் ஹபிசாபாத் மாவட்டம், தெற்கில் சர்கோதா மாவட்டம் மற்றும் மேற்கில் ஜீலம் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. புவியியல்இம்மாவட்டம் ஜீலம் ஆறு மற்றும் செனாப் ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. மக்கள் தொகை பரம்பல்2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 285,989 குடியிருப்புகள் கொண்ட மாவட்ட மக்கள் தொகை 1,829,486 ஆகும். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 100.54 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 70.27% ஆகும்.[2][3]இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 457,547 (25.01%) ஆக உள்ளனர்.[4]நகர்புறங்களில் 346,141 (18.92%) மக்கள் வாழ்கின்றனர்.[2] சமயம்இம்மாவட்டத்தில் இசுலாம் 99.40%, கிறித்துவம் 0.52% மற்றும் பிற சமயங்கள் 0.08% மக்கள் பின்பற்றுகின்றனர்[5]. மொழிகள்இம்மாவட்டத்தில் பஞ்சாபி மொழியை 93.2% மக்களும், உருது மொழியை 4.57% மக்களும், பஷ்தூ மொழியை 1.77% மக்களும் தாய் மொழியாகப் பேசுகின்றனர்.[6] தட்ப வெப்பம்இம்மாவட்டத்தின் கோடைக்காலத்தில் அதிக வெப்பமும், குளிர்காலத்தில் கடுங்குளிரும் நிலவுகிறது. கோடைக்கால பகலில் அதிகபட்ச வெப்பம் 48 °C (118 °F) அளவிற்கும், குளிர்கால வெப்பம் 3 °C (37 °F).வரையும் இருக்கும். ஆண்டின் சராசரி மழைப்பொழிவு 388 மில்லிமீட்டர்கள் (15.3 அங்) ஆகும்.[7] மாவட்ட நிர்வாகம்இம்மாவட்டம் 3 வருவாய் வட்டங்களையும், 80 ஒன்றியக் குழுக்களையும் கொண்டது.[8]
![]() மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia