2024 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம் (2024 ICC Men's T20 World Cup) என்பது ஒன்பதாவது ஐசிசி இருபது20 உலகக்கிண்ணப் போட்டித் தொடர் ஆகும். இது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டி ஆகும். ஆண்களுக்கான தேசிய அணிகள் போட்டியிட்ட இத்தொடர் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் (ஐசிசி) ஏற்பாடு செய்யப்பட்டது. இத்தொடர் 2024 சூன் 1 முதல் சூன் 29 வரை மேற்கிந்தியத் தீவுகள், ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றால் இணைந்து நடத்தப்பட்டது.[1] அமெரிக்காவிலும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு வெளியே அமெரிக்காவின் வேறு எந்த நாட்டிலும் விளையாடப்படும் முதல் ஐசிசி உலகக் கோப்பைப் போட்டியாக இது இருந்தது.[2] இதற்கு முந்தைய 2022 சுற்றின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி பாக்கித்தானை வென்று நடப்பு வாகையாளராக போட்டியில் நுழைந்தது.
2022 போட்டியில் 16 அணிகள் பங்குபற்றின, ஆனால் 2024 உலகக்கோப்பையில், போட்டியை நடத்தும் 2 நாடுகள் உட்பட, 20 அணிகள் போட்டியிட்டன. 2022 பதிப்பின் முதல் எட்டு அணிகள், ஐசிசி ஆண்கள் இ20ப அணி தரவரிசையில் அடுத்த இரண்டு அணிகள், பிராந்திய தகுதிப் போட்டிகளால் தீர்மானிக்கப்பட்ட எட்டு அணிகள் ஆகியவை இவற்றில் அடங்கின. கனடாவும்உகாண்டாவும் முதன்முறையாக ஆண்கள் இ20ப உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றன, அதே சமயம் அமெரிக்கா இணைந்து நடத்துவதன் மூலம் முதல் முறையாகப் பங்கேற்றது.
இந்தியா இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது இரண்டாவது இ20 உலகக்கிண்ணத்தை வென்றது, அத்துடன் இ20 உலகக்கிண்ணங்களை இருமுறை வென்ற இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகளை சமன் செய்தது.[3] சுற்றின் இறுதிப் போட்டி விராட் கோலி, இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா ஆகியோருக்குக் கடைசி இ20 உலக்கிண்ணப் போட்டியும் ஆகும்.[4][5]
போட்டி வடிவம்
20 தகுதிபெறும் அணிகள் ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன; ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.[1][6] இந்தக் கட்டத்தில், தகுதி பெறும் அணிகள் நான்கு அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும்; ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் வெளியேறு நிலைக்குத் தகுதி பெறும். வெளியேறு நிலைப் போட்டிகளில் இரண்டு அரையிறுதிப் போட்டிகளும், இறுதிப் போட்டியும் விளையாடப்படும்.[7]
2022 போட்டியில் முதல் எட்டு இடங்களைப் பிடித்த அணிகளும், இரண்டு புரவலர்களும் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றனர். 2022 நவம்பர் 14 நிலவரப்படி, ஏற்கனவே இறுதிப் போட்டியில் இடம் பெறாத ஐசிசி ஆண்கள் இ20ப அணி தரவரிசையில் சிறந்த தரவரிசையில் உள்ள அணிகளால் மீதமுள்ள இரண்டு இடங்கள் எடுக்கப்பட்டன.[10][11]
மீதமுள்ள எட்டு இடங்கள் ஐசிசியின் பிராந்திய தகுதிச் சுற்றுகள் மூலம் நிரப்பப்பட்டன, இதில் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பாவிலிருந்து தலா இரண்டு அணிகளும், அமெரிக்கா, கிழக்கு ஆசியா-பசிபிக் குழுக்களில் இருந்து தலா ஒரு அணியும் சேர்க்கப்பட்டன.[12] மே 2022 இல், ஐரோப்பா, கிழக்கு ஆசியா-பசிபிக், ஆப்பிரிக்காவிற்கான துணை-பிராந்திய தகுதி-காண் பாதைகளை ஐசிசி உறுதிப்படுத்தியது.[13]
அக்டோபர் 2023 இல் அமெரிக்காக்களின் தகுதிப் போட்டிகளில் அதன் இறுதிப் போட்டியில் பெர்முடாவைத் தோற்கடித்த கனடா அதன் தகுதியை உறுதி செய்தது.[16] அடுத்த மாதம், நேபாளத்தில் நடந்த ஆசியத் தகுதிச் சுற்றில் இறுதிப் போட்டிக்கு நேபாளமும்ஓமானும் தகுதி பெற்றன,[17] அதைத் தொடர்ந்து நமீபியாவும்உகாண்டாவும் ஆப்பிரிக்கத் தகுதிச் சுற்றில் முதல்-இரண்டு இடத்தைப் பெறுவதை உறுதிசெய்து தகுதிபெறும் இறுதி இரண்டு அணிகள் ஆயின. சிம்பாப்வே தகுதி பெறத் தவறிய ஒரே தேர்வுத் துடுப்பாட்டம் விளையாடும் நாடு ஆனது.[18][19]
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை 2024 சனவரி 5 அன்று போட்டியிடும் குழுக்களையும் அதன் போட்டிகளையும் அறிவித்தது, துடுப்பாட்ட வரலாற்றில் முதல் பன்னாட்டுப் போட்டியை விளையாடிய அணிகளான அமெரிக்காவிற்கும்கனடாவிற்கும் இடையேயான தொடக்க மோதல், 2024 சூன் 1 அன்று டெக்சசு, கிராண்ட் பிரைரி விளையாட்டரங்கில் நடைபெற்றது.[21]
மொனாங்க் பட்டேல் 50 (38) முகம்மது ஆமிர் 1/25 (4 நிறைவுகள்)
ஆட்டம் சமநிலை (அமெரிக்கா சிறப்பு நிறைவில் வெற்றி) கிரான்ட் பிரெய்ரி அரங்கு, டாலஸ், டெக்சஸ் நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இங்), அலாகுதீன் பலேக்கர் (தெஆ) ஆட்ட நாயகன்: மொனாங்க் பட்டேல் (ஐஅ)
நாயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அமெரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மார்க் அடாயர் 34 (24) செரமி கோர்டன் 2/16 (4 நிறைவுகள்)
கனடா 12 ஓட்டங்களால் வெற்றி நசாவு கவுண்டி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கு, ஈசுட் மெடோ, நியூயார்க்கு நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), சாம் நொகாசுக்கி (ஆசி) ஆட்ட நாயகன்: நிக்கொலாசு கெர்ட்டன் (கன)
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இ20 உலகக்கோப்பைக்கான ஆட்டம் ஒன்றில் கனடா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
பாக்கித்தான் 7 இலக்குகளால் வெற்றி நசாவு கவுண்டி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கு, ஈசுட் மெடோ, நியூயார்க்கு நடுவர்கள்: ஏட்ரியன் ஓல்சுடொக் (தெஆ), சாம் நொகாசுக்கி (ஆசி) ஆட்ட நாயகன்: முகம்மது ஆமிர் (பாக்)
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
திராவிசு கெட் 68 (49) மார்க் உவாட் 2/34 (4 நிறைவுகள்)
ஆத்திரேலியா 5 இலக்குகளால் வெற்றி டாரென் சாமி துடுப்பாட்ட அரங்கு, குரொசு தீவு, செயிண்ட் லூசியா நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இங்), ஆசிப் யாக்கூப் (பாக்) ஆட்ட நாயகன்: மார்கஸ் ஸ்டோய்னிஸ் (ஆசி)
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இந்த ஆட்ட முடிவை அடுத்து இசுக்காட்லாந்து வெளியேறிய நிலையில் இங்கிலாந்து சூப்பர் 8 க்கு தகுதி பெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
டிரென்ட் போல்ட் (நியூ) தனது கடைசி இ20ப போட்டியில் விளையாடினார்.
லொக்கி பெர்கசன் (நியூ) இ20ப போட்டியில் தொடர்ச்சியாக ஓட்டங்கள் எதுவும் கொடுக்காமல் நான்கு ஓவர்கள் வீசிய இரண்டாவது பந்துவீச்சாளர் ஆனார். இதற்கு முன், 2021-இல் பனாமாவுக்கு எதிராக, கனடாவின் சாத் பின் சாபர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளார்.[35]
மேற்கிந்தியத் தீவுகள் 104 ஓட்டங்களால் வெற்றி டாரென் சாமி துடுப்பாட்ட அரங்கு, குரொசு தீவு, செயிண்ட் லூசியா நடுவர்கள்: கிறிசு பிரவுண் (நியூ), அலாகுதீன் பலேக்கர் (தெஆ) ஆட்ட நாயகன்: நிக்கோலஸ் பூரன் (மேஇ)
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சரித் அசலங்க 46 (21) லோகன் வான் பீக் 2/45 (4 நிறைவுகள்)
மைக்கேல் லெவிட் 31 (23) நுவான் துசார 3/24 (3.4 நிறைவுகள்)
இலங்கை 83 ஓட்டங்களால் வெற்றி டாரென் சாமி துடுப்பாட்ட அரங்கு, குரொசு தீவு, செயிண்ட் லூசியா நடுவர்கள்: அலாகுதீன் பலேக்கர் (தெஆ), அலெக்ஸ் வார்ப் (இங்) ஆட்ட நாயகன்: சரித் அசலங்க (இல)
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சூப்பர் 8
குழு நிலை ஆட்டங்களுக்குப் பிறகு, ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 கட்டத்தில் நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக வைக்கப்படும். இது ஒற்றை சுழல்-முறையில் விளையாடப்படும், ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு அணிகள் வெளியேறு நிலைக்கு முன்னேறும்.[1] உலகக்கிண்ணப் போட்டிக்கு முன்னதாக, சூப்பர் 8 நிலைகளுக்கான எட்டு தரவரிசை அணிகளை ஐசிசி அறிவித்தது - அவை ஆத்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாக்கித்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவை ஆகும். இவ்வணிகள் குழு நிலையிலிருந்து முன்னேறினால், குழுநிலையில் அவர்களின் நிலையைப் பொருட்படுத்தாமல், அவர்கள் சூப்பர் 8 இல் முன்னரே தீர்மானிக்கப்பட்ட நிலைகளில் வைக்கப்படுவார்கள். தரவரிசையில் இடம் பெறாத அணி தகுதி பெற்றால், அவை நேரடியாக சூப்பர் 8 குழுவில் குறிப்பிட்ட அணிக்குப் பதிலாக மாற்றப்படுவார்கள்.[39][40] குழு நிலையிலிருந்து சூப்பர் 8 இற்கு எந்தப் புள்ளிகளும் கொண்டு செல்லப்படமாட்டாது.[41]
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பாட் கம்மின்ஸ் (ஆசி) தனது இரண்டாவது அடுத்தடுத்த இ20ப மூவிலைக்கைப் பெற்று, இ20 உலகக்கிண்ணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மூவிலைக்கைப் பெற்ற ஒரே வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[50]
இது ஆத்திரேலியாவிக்கு எதிரான ஆப்கானித்தானின் முதலாவது இ20ப வெற்றி ஆகும்..[51]
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ரோகித் சர்மா (இந்) இ20ப போட்டிகளில் 200 ஆறு ஓட்டங்களைப் பெற்ற முதலாவது வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[52] அத்துடன் இ20ப போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்து, பாபர் அசாமின் சாதனையை முறியடித்தார்.[53]
இவ்வாட்ட முடிவை அடுத்து இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.[54]
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கிறிசு சோர்தான் (இங்) தனது முதலாவது இ20ப மூவிலக்கைப் பெற்று, இ20 உலக்கக்கிண்ணப் போட்டியில் மூவிலக்கைப் பெற்ற முதலாவது ஆங்கிலேய வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[58]
இவ்வாட்ட முடிவை அடுத்து, இங்கிலாந்து அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றது, ஐக்கிய அமெரிக்கா வெளியேறியது.
இ20 உலகக்க்கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத அதிகபட்ச ஓட்டங்களை (176) அடித்தது, 202-இல் ஆத்திரேலியாவால் நிர்ணயிக்கப்பட்ட 172 ஓட்டங்களை அது முறியடித்தது.[65]
ஐசிசி ஆண்கள் இ20 உலகக்கிண்ணத்தின் ஒன்பதாவது பதிப்பில், 20 அணிகள் பங்கேற்கும் போட்டியின் வெற்றியாளர்கள் குறைந்தபட்சம் $2.45 மில்லியன் பெறுவார்கள். இது போட்டியின் வரலாற்றில் மிக உயர்ந்த பரிசுத் தொகையாகும், அத்துடன் வெற்றியாளர்கள் பார்படோசில் உள்ள கென்சிங்டன் ஓவலில் சூன் 29 அன்று உலகக்கிண்ணத்தைப் பெறுவார்கள்.[76]
இரண்டாவதாக வரும் அணி குறைந்தபட்சம் $1.28 மில்லியனைப் பெறும், அதே சமயம் தோல்வியடைந்த அரையிறுதி அணிகள் ஒவ்வொன்றிற்கும் $787,500 கிடைக்கும்.
சூப்பர் 8 களில் இருந்து வெளியேறத் தவறிய நான்கு அணிகள் ஒவ்வொன்றும் $382,500 பெறுவர், அதே நேரத்தில் 9-வது, 10-வது, 11-வது, 12-வது அணிகள் ஒவ்வொன்றும் $247,500 பெறுகின்றன. 13 முதல் 20-வது இடத்தைப் பெறுபவர்கள் $225,000 பெறுவார்கள்.
இவற்றை விட, ஒவ்வொரு அணியும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளைத் தவிர்த்து வெற்றி பெறும் ஒவ்வொரு போட்டிக்கும் $31,154 கூடுதலாகப் பெறுகின்றன.
குறிப்புகள்
↑ 1.01.1Tபோட்டியின் போது தற்காலிக இருக்கைகளைப் பயன்படுத்தி இந்த அரங்கின் திறன் விரிவாக்கப்படும்.
↑ஐக்கிய அமெரிக்கா தகுதிபெற்று, பாக்கித்தானுக்கு முதலில் ஒதுக்கப்பட்ட ஆ1 இடத்தைப் பிடித்தது.[42]
↑ஆத்திரேலியாவிற்கு முன்னரேயே ஒதுக்கப்பட்ட ஆ2 இடத்திற்கு அது தகுதி பெற்றது. இங்கிலாந்துக்கு முன்னரேயே ஒதுக்கப்பட்ட ஆ1 இடத்திற்கு அது தகுதிபெற்றது.
↑ஆப்கானித்தான் தகுதிபெற்று, நியூசிலாந்துக்கு முதலில் ஒதுக்கப்பட்ட இ1 இடத்தைப் பிடித்தது.[43]
↑மேற்கிந்தியத் தீவுகளுக்கு முன்னரேயே ஒதுக்கப்பட்ட இ2 இடத்திற்கு அது தகுதி பெற்றது.[44]
↑வங்காளதேசம் தகுதிபெற்று, இலங்கைக்கு முதலில் ஒதுக்கப்பட்ட ஈ2 இடத்தைப் பிடித்தது.[45]