ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் (Andhra Pradesh High Court) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் உயர் நீதிமன்றமாகும். இந்த உயர் நீதிமன்றத்தின் இருக்கை தற்போது அமராவதியில் உள்ளது.[1] இருப்பினும் ஆந்திரப் பிரதேச அரசு இந்த உயர் நீதிமன்றத்தின் முதன்மை இருக்கையை கர்னூலுக்கு மாற்றுவதற்கான சட்ட மசோதாவை மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி நிறைவேற்றியுள்ளது.[2][3] வரலாறுஆந்திரப் பிரதேசத்தின் உயர்நீதிமன்றம் 1954ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. முந்தைய மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்து ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. ஹைதராபாத் மாநிலத்தை ஆந்திரா மாநிலத்துடன் இணைத்து ஆந்திரா மாநிலம் அமைத்த பிறகு, நீதிமன்றம் ஆரம்பத்தில் 1956 வரை குண்டூரில் செயல்பட்டது. பின்னர் உயர்நீதிமன்றம் அப்போதைய மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் செயல்படத் தொடங்கியது. இருப்பினும், ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்ட பிறகு, ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014இன் படி, ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கான புதிய உயர்நீதிமன்றம் உருவாக்கப்படும் வரை, ஐதராபாத்தில் உள்ள உயர்நீதிமன்றம் ஒரு பொதுவான உயர் நீதிமன்றமாக அமைக்கப்பட்டது. பின்னர் குடியரசுத் தலைவரின் உத்தரவின்படி, ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014ன் கீழ் ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கான உயர் நீதிமன்றம் 1 ஜனவரி 2019 அன்று நிறுவப்பட்டது. அமைவிடம்ஆந்திர உயர் நீதிமன்றம், அமராவதியின் சுற்றுப்புறமான நெலபாடு என்ற இடத்தில் அமைக்கப்பட்டது. இது 2.2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 23 அரங்குகளைக் கொண்ட தரைத்தளம், முதல் மற்றும் இரண்டாம் தளங்களை கொண்ட அமைப்பாகும். இந்திய ரூபாயில் சுமார் 157.3 கோடி செலவில் 4 ஏக்கரில் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தால் கட்டப்பட்டது.[4] கர்னூல் இருக்கைஆந்திரப் பிரதேச அரசு, அமராவதியிலிருந்து கர்னூலுக்கு தற்போதுள்ள முதன்மை இருக்கையினை மாற்றுவதன் மூலம் கர்னூலில் உயர் நீதிமன்றத்தின் இருக்கையை நிறுவ முடிவு செய்துள்ளது. மேலும் இது இந்திய அரசுக்கு மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.[5] இந்த நடவடிக்கையானது ஸ்ரீபாக் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆந்திரப் பிரதேசத்தின் நிர்வாகத் தலைநகரான விசாகப்பட்டினத்தில் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் இருக்கை அமைக்கவும் ஆந்திர அரசு சட்ட மசோதாவினை முன்மொழிந்து இயற்றியுள்ளது.[6] தலைமை நீதிபதி வரிசை
நீதிபதிகள்ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கான புதிய உயர் நீதிமன்றத்தின் செயல்பாட்டினை 1 ஜனவரி 2019 முதல் அமராவதியில் முதன்மை இருக்கையுடன் மத்திய அரசு அறிவித்துள்ளது.[7] இதன்படி இந்த நீதிமன்றத்தில் 37 (நிரந்தர:28, கூடுதல்:9) நீதிபதிகள் உள்ளனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia