செந்தூருணி காட்டுயிர் உய்விடம்
செந்தூருணி வனவிலங்கு சரணாலயம் (Shendurney Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாகும். இது கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் [2] அமைந்துள்ளது. இது அகத்தியமலை உயிர்க்கோள காப்பபகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. 172.403 சதுர கிலோமீட்டர்கள் (66.565 sq mi) பரப்பளவு கொண்ட இந்த சரணாலயமானது 1984 ஆகத்து 25, அன்று நிறுவப்பட்டது. இந்த சரணாலயத்தின் பெயரானது இப்பகுதிக்குதியைச் சேர்ந்த மரமான ( குளுட்டா திருவிதாங்கிகா ) செந்தூரினியின் பெயரைக்கொண்டு இடப்பட்டது.[3] இந்த சரணாலயம் கிட்டத்தட்ட 18.69 சதுர கி.மீ பரப்பளவுள்ள ஒரு செயற்கை ஏரியைக் கொண்டுள்ளது. மேலும் தேன்மலா அணையின் நீர்த்தேக்கப்பகுதியாலும் சூழப்பட்டுள்ளது. செந்தூரணி வனவிலங்கு சரணாலயம் தாவர பன்முகத்தன்மையின் சொர்க பூமியாகும். இந்த சரணாலயத்தில் 150 க்கும் மேற்பட்ட தாவரக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1257 வகையான பூச்செடிகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 309 இனங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சேர்ந்தவை. வலசைவரக்கூடிய, உள்ளூர் மற்றும் அருகிய இன பறவைகள் உட்பட 267 இனங்களைச் சேர்ந்த பறவைகள் இங்கு பதிவாகியுள்ளன.[4] இந்த சரணாயத்துக்கு உட்பட்ட காடுகளானது வெப்பமண்டல பசுமைமாறா காடுகள் மற்றும் அரை பசுமைமாறா காடுகளை முதன்மையாக கொண்டுள்ளது.[5] இது மிகவும் ஆபத்துக்கு உள்ளான உயிரினமான சோலைமந்திகளின் இருப்பிடமாகவும் உள்ளது. இரவாடி பறவையான பெரிய காது பக்கி பறவையானது முதல் முறையாக கேரளத்தின் கொல்லத்தில் உள்ள செந்தூரணி வனவிலங்கு சரணாலயத்தில் காண்டறியப்பட்டது. முன்னதாக, இது 1995 மே இல் தமிழ்நாட்டின் சிறுவாணி மலை அடிவாரத்தில் இருப்பது பதிவு செய்யப்பட்டது. இந்தியாவின் முதல் சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டமான தென்மலா சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டமானது செந்தூருணி வனவிலங்கு சரணாலயத்தையும், அதைச் சுற்றியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.[6] செந்தூரணி சரணாலயத்தின் மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், இங்கு சந்தன மரங்களே இல்லை. [சான்று தேவை] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia