திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்
திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறைநாதர் கோயில் (Tiruchotruturai Odhanavaneswarar Temple) தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது.[1] இத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வீரசிங்கம்பேட்டை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் திருக்கோயிலுக்கு செயல் அலுவலராக உள்ளார். இத்தலம் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். அடியவரின் பசிதீர உணவு தரும் தலமெனப்படுகிறது. கௌதமர், இந்திரன் தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 13வது சிவத்தலமாகும். தல வரலாறுவழிபடும் அடியவர்களின் பசிப் பிணி தீர, இறைவன் உணவு வழங்குபவன்; ஆதலின் இத்தலம் சோற்றுத்துறை எனப்பட்டது. (பிறவிப்பிணி தீர இறைவன் வீடு பேறு வழங்குபவன் என்பது பொருள்.) அடியார்கள் பசிப்பிணியால் வருந்தியபோது இறைவன் அக்சய பாத்திரம் வழங்கி அனைவரின் பசியையும் போக்கியதால் இறைவன் இறைவிக்குத் தொலையாச் செல்வர், அன்னபூரணி என்ற திருப்பெயர்கள் வழங்கலாயிற்று. தல சிறப்புகள்
திருவையாறு சப்தஸ்தானம்![]() திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும் செல்வார். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்[2]. இருப்பிடம்தஞ்சை மாவட்டத்தில் திருக்கண்டியூருக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் குடமுருட்டியாற்றின் தென் கரையில் திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறைநாதர் கோயில் உள்ளது. இத்தலம் கண்டியூர் - அய்யம்பேட்டை சாலையில் உள்ளது. வரலாறுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] கோயில் அமைப்புஇக்கோயிலில் ஒதனவனேஸ்வரர், அன்னபூரணி சன்னதிகளும், விநாயகர், முருகன், அம்மாள், விஷ்ணு, தெட்சிணாமூர்த்தி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3] பூசைகள்இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் தமிழ் வருடபிறப்பு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. பேருந்து வழிதிருவையாற்றிலிருந்தும் திருக்கண்டியூரிலிருந்தும் இத்தலத்திற்குச் செல்லப் பேருந்து வசதிகள் உள்ளன. மேலும் கும்பகோணத்திலிருந்து அய்யம்பேட்டை வழியாக கல்லணை மற்றும் திருவையாற்றுக்குச் செல்லும் பேருந்து மூலமாகவும் இத்தலத்தை அடையலாம். பிற சாலை போக்குவரத்து வழிகள்
தொடர்வண்டி வழிதிருச்சோற்றுத்துறைக்கு அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் : தஞ்சாவூர் வானூர்தி வழிதிருச்சோற்றுத்துறைக்கு அருகிலுள்ள வானூர்தி நிலையம் : திருச்சிராப்பள்ளி திருத்தலப் பாடல்கள்இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்: திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்
திருநாவுக்கரசர் பாடிய பதிகம்
சுந்தரர் பாடிய பதிகம்
ஆதாரங்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
இவற்றையும் பார்க்கவெளி இணைப்புகள்
படத்தொகுப்பு
|
Portal di Ensiklopedia Dunia