புரோமின் ஓராக்சைடு இயங்குறுப்பு (Bromine monoxide radical) என்பது BrO. என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல்சேர்மமாகும்.[1][2] புரோமினும் ஆக்சிசனும் சேர்ந்து இந்த இயங்குறுப்பு உருவாகிறது. பல புரோமின் ஆக்சைடுகளில் மிகவும் எளிய புரோமின் ஆக்சைடாகவும் இயங்குறுப்பாகவும் புரோமின் ஓராக்சைடு இயங்குறுப்பு அறியப்படுகிறது. இச்சேர்மம் வளிமண்டல இரசாயன செயல்முறைகளை பாதிக்கும் திறன் கொண்டது. இயற்கையாகவே எரிமலைக் குழம்புகளில் காணப்படுகிறது.[3] Naturally, BrO can be found in volcanic plumes.[4][5]ஆக்சிசன் மோனோபுளோரைடு, குளோரின் மோனாக்சைடு மற்றும் அயோடின் மோனாக்சைடு இயங்குறுப்புகளை ஒத்த பண்புகளை கொண்டுள்ளது.
வேதிப்பண்புகள்
ஓசோனை சிதைக்கும் வினையூக்கியாக இந்த சேர்மம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. BrO மற்றும் குளோரின் டை ஆக்சைடு (OClO) ஆகியவற்றின் இரசாயன வினை மீவளிமண்டலத்தில் ஓசோன் சிதைவை ஏற்படுத்துகிறது.[6]
↑Warnach, Simon; Sihler, Holger; Borger, Christian; Bobrowski, Nicole; Schmitt, Stefan; Schöne, Moritz; Beirle, Steffen; Platt, Ulrich et al. (1 April 2021). "A global perspective on Bromine monoxide composition in volcanic plumes derived from three years of S5-P/TROPOMI data". Egu General Assembly Conference Abstracts (Harvard University): EGU21–1696. doi:10.5194/egusphere-egu21-1696. Bibcode: 2021EGUGA..23.1696W.