இருபுரோமின் மூவாக்சைடு
இருபுரோமின் மூவாக்சைடு (Dibromine trioxide) என்பது Br2O3.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். புரோமின் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் ஆரஞ்சு நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது[2]. Br-O-BrO2 என்ற புரோமின் – புரோமேட்டு கட்டமைப்புடன் காணப்படும் இருபுரோமின் மூவாக்சைடு -40 ° செல்சியசு வெப்பநிலைக்கு கீழ் நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. வளைந்த மூலக்கூற்று அமைப்பின் Br-O-Br பிணைப்பின் பிணைப்புக் கோணம் 111.2° மற்றும் Br-O-BrO2 பிணைப்பின் பிணைப்பு நீளம்1.85Å. என்ற அளவுகளிலும் உள்ளன[3]. வினைகள்தாழ் வெப்பநிலையில்[2][3] இருகுளோரோ மீத்தேனில் உள்ள புரோமினுடன் ஓசோன் சேர்த்து வினைபுரியச் செய்வதால் இருபுரோமின் மூவாக்சைடைத் தயாரிக்கலாம். காரக் கரைசல்களில் இது விகிதச்சமமாதலின்றி Br− மற்றும் BrO−3 ஆகப் பிரிகிறது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia