புரோமின் ஈராக்சைடு
புரோமின் ஈராக்சைடு (Bromine dioxide) என்பது BrO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மம் ஆகும். புரோமினும் ஆக்சிசனும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் மஞ்சள் நிறத்தில் இருந்து மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்திற்கு மாறக்கூடியதாக நிலைப்புத் தன்மையற்று காணப்படுகிறது. முதன்முதலில் 1937 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இச்சேர்மம் வளிமண்டலத்தில் உள்ள ஓசோனுடன் ஈடுபடும் வினை முக்கியத்துவம் பெறுமென முன்கணித்துக் கூறப்பட்டது. புரோமின் ஈராக்சைடு , குளோரின் ஈராக்சைடுக்கு இணையான பண்புகளைப் பெற்றுள்ளது. இதற்கு இணையாகக் கருதப்படும் ஆலசனைவிட தனிமவரிசை அட்டவணையில் ஒரு வரிசை அதிகமான இடத்தில் புரோமின் இடம்பெற்றுள்ளது. தயாரிப்பு மற்றும் வினைகள்புரோமின் மற்றும் ஆக்சிசன் கலந்த கலவையில் குறைவான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் மின்சாரத்தைச் செலுத்தினால் புரோமின் ஈராக்சைடு உண்டாகிறது. 50 பாகை செல்சியசு வெப்பநிலையில் முக்குளோரோபுளோரோமீத்தேன் முன்னிலையில் புரோமின் வாயுவுடன் ஓசோனைச் சேர்த்தும் புரோமின் ஈராக்சைடைத் தயாரிக்கலாம். ஒரு காரத்துடன் இச்சேர்மத்தைச் சேர்க்கும் போது புரோமைடும் புரோமேட்டு எதிர் அயனிகளும் உண்டாகின்றன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia