அலெக்ஸ் பச்சேகோ
அலெக்சான்டர் ஃபெர்னான்டோ பச்சேகோ (Alexander Fernando Pacheco; பிறப்பு: ஆகஸ்ட் 1958) ஒரு அமெரிக்க விலங்குரிமை செயற்பாட்டாளர் ஆவார். இவர் "600 மில்லியன் டாக்ஸ்" என்னும் நிறுவனத்தின் உருவாக்கியவரும்,[1] பீட்டா அமைப்பின் இணை நிறுவனரும் முன்னாள் தலைவரும், ஸீ ஷெப்பர்ட் கன்சர்வேஷன் சொசைட்டியின் ஆலோசனைக் குழு உறுப்பினரும் ஆவார்.[2] 1979 ஆம் ஆண்டில் போர்ச்சுகீசிய கடற்கொள்ளையர் திமிங்கல வேட்டைக் கப்பலான சியராவுக்கு எதிரான பிரச்சாரத்தின் போது அட்லாண்டிக் பெருங்கடலின் குறுக்கே சீ ஷெப்பர்ட் என்ற கப்பலில் பச்சேகோ முதன்முதலில் கேப்டன் பால் வாட்சனுடன் இணைந்து பணியாற்றினார். தி சீ ஷெப்பர்ட் மற்றும் சியரா ஆகிய இரண்டு கப்பல்களுமே போர்த்துகீசிய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு பின்னர் மூழ்கடிக்கப்பட்டன. 1981 ஆம் ஆண்டில் சில்வர் ஸ்பிரிங் குரங்குகள் வழக்கு என அறியப்பட்டு பெரிதும் பேசப்பட்ட வழக்கில் மேரிலாந்து மாகாணத்தின் சில்வர் ஸ்பிரிங்கு நகரில் உள்ள நடத்தை ஆராய்ச்சிக் கூடம் (Institute for Behavioral Research) நடத்திய பரிசோதனைகளுக்கு ஆட்படுத்தப்பட்ட 17 நண்டுண்ணி மக்காக்கு குரங்குகளை மீட்டெடுக்கும் செயற்பாட்டில் இங்க்ரிட் நியூகர்க்குடன் இணைந்து பச்சேகோ பொது கவனத்திற்கு வந்தார். இக்குரங்குகளைக் காப்பாற்றுவதற்கான பொதுப் பிரச்சாரத்தின் விளைவாகவே அமெரிக்காவில் விலங்குரிமை இயக்கம் தோன்றியது என்று திரைப்படத் தயாரிப்பாளர் ஆலிவர் ஸ்டோன் கருதுகிறார்.[3] இவற்றையும் பார்க்கமேற்கோள் தரவுகள்
மேலும் படிக்க
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia