ஸ்டீபன் ஆர். எல். கிளார்க்
ஸ்டீபன் ரிச்சர்ட் லிஸ்டர் கிளார்க் (Stephen Richard Lyster Clark) (பிறப்பு: 30 அக்டோபர் 1945) ஒரு ஆங்கில மெய்யியலாளரும் லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற மெய்யியல் பேராசிரியர் ஆவார்.[3] இவர் சமயம் மற்றும் விலங்குரிமை பற்றிய தத்துவங்களில் நிபுணத்துவம் பெற்ற இவரது எழுத்துக்கள் கிறிஸ்தவ பிளாட்டோனிஸ்ட் என்று பரவலாக விவரிக்கப்படக்கூடிய ஒரு தத்துவ நிலைப்பாட்டில் இருப்பவை. இருபது புத்தகங்களை எழுதியுள்ள இவரது படைப்புகளில் தி மாரல் ஸ்டேடஸ் ஆவ் அனிமல்ஸ் ("விலங்குகளின் தார்மீக நிலை") (1977), தி நேச்சர் ஆவ் தி பீஸ்ட் ("மிருக இயல்பு") (1982), அனிமல்ஸ் அண்ட் தேர் மாரல் ஸ்டேண்டிங் ("விலங்குகளும் அவற்றின் தார்மீக நிலையும்") (1997), ஜி.கே. செஸ்டர்டன் (2006), பிலசோபிகல் பியூசர்ஸ் ("தத்துவ எதிர்காலங்கள்") (2011), மற்றும் ஏன்சியன்டு மெடிட்டரேனியன் பிலாசபி ("பண்டைய மத்திய தரைக்கடல் தத்துவம்") (2012) ஆகிய புத்தகங்கள் பிரதானமானவை. இவற்றுடன் 77 பாண்டித்திய கட்டுரைகள் மற்றும் 109 புத்தகங்களின் அத்தியாயங்களும் இவரது எழுத்துகளில் அடக்கம்.[4][5] மேலும் இவர் 1990 முதல் 2001 வரை பயன்பாட்டு மெய்யியல் ஆய்விதழின் தலைமை ஆசிரியராவும் பணியாற்றியவர் ஆவார்.[4] கல்வியும் பணியாற்றலும்கிளார்க் 30 அக்டோபர் 1945 அன்று இங்கிலாந்தில் பெட்போர்டுஷயரின் லூட்டனில் பிறந்தார். அவரது குடும்பம் ஷ்ரோப்ஷயர் மற்றும் ஸ்டாபோர்டுஷயரைச் சேர்ந்தது. அவரது தந்தை டி.ஏ.ஆர். கிளார்க் ஒரு பயிற்சி ரயில்வே பொறியாளராக இருந்து பின்னர் தொழில்நுட்ப ஆசிரியரானவர். அதன் பின்னர் மிடில்ஸ்பரோ தொழில்நுட்பக் கல்லூரியின் (இப்போது டீஸைட் பல்கலைக்கழகம்) முதல்வராக நியமிக்கப்பட்டு பின்னர் நாட்டிங்ஹாம் தொழில்நுட்பக் கல்லூரியின் (இப்போது நாட்டிங்ஹாம் டிரென்ட் பல்கலைக்கழகம்) முதல்வராக நியமிக்கப்பட்டார். அவரது தாயாரும் சாமுவேல் ஃபின்னியின் மகளுமான எம்.கே. கிளார்க் ஒரு ஆசிரியையாக இருந்தார். கிளார்க் ஆங்கிலிக கிறித்தவ பாரம்பரியத்தில் வளர்க்கப்பட்டார்.[6] நாட்டிங்ஹாம் உயர்நிலைப் பள்ளியில் (1956–1964) படித்த பிறகு, கிளார்க் ஆக்ஸ்போர்டில் உள்ள பாலியோல் கல்லூரியில் (1964–1968) சேர்ந்து படிக்கும் உதவித்தொகையைப் பெற்றார். 1968-ல் கிரேட்ஸ் (கிளாசிக்ஸ்) பாடத்தில் முதல் வகுப்பு ஆனர்ஸ் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து ஆல் சோல்ஸில் (1968–1975) உறுப்பினர் தகுதியும் பெற்றார். 1973-ம் ஆண்டு அவருக்கு தத்துவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. பாலியோலில் ஆர்தர் பிரையர் மற்றும் சர் அந்தோணி கென்னி ஆகிய மெய்யியல் அறிஞர்கள் கிளார்க்கின் மீது பெரும் அறிவுசார் தாக்கத்தைக் கொண்டிருந்தனர் என்றும், ஆல் சோல்ஸில் கிளார்க்கை தன்பால் இழுத்த மிகப்பெரிய ஆளுமைகளில் ராபின் ஜேஹ்னர் முக்கியமானவர் என்றும் பிரானன் ஹான்காக் தனது படைப்பில் கூறுகிறார்.[6] ஆக்ஸ்போர்டுக்குப் பிறகு கிளார்க் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் ஒன்பது ஆண்டுகள் தார்மீக மெய்யியலில் விரிவுரை ஆற்றிவந்தார். அதன் பின்னர் 1984-ல் லிவர்பூலில் தத்துவப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 2009-ம் ஆண்டின் இறுதியில் இந்தப் பதவியில் இருந்து கிளார்க் ஓய்வு பெற்றார். கிளார்க் வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராகவும், டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஆலன் ரிச்சர்ட்சன் பெல்லோஷிப்பிலும் பணியாற்றியுள்ளார்.[6] விலங்குரிமைப் பணிகள்கிளார்க்கின் ஆரம்பகாலப் பணிகளில் பெரும்பாலும் விலங்கு நெறியியல் தொடர்பானவையாக இருந்தன. 1998 முதல் 2006 வரை விலங்குப் பரிசோதனை குறித்து உள்துறை செயலாளருக்கு ஆலோசனை வழங்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் விலங்கு நடைமுறைகள் குழுவில் கிளார்க் பணியாற்றினார். விலங்குப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அதை எதிர்க்கும் மற்றவர்களால் அமைக்கப்பட்ட ஒரு சிந்தனைக் குழுவான பாய்ட் குழுவிலும் அவர் இருந்துள்ளார்.[4] 1977-ம் ஆண்டில் கிளார்க் தி மோரல் ஸ்டேட்டஸ் ஆவ் அனிமல்ஸ் என்ற புத்தகத்தை எழுதினார். "விலங்குகளை 'தேவையற்ற வலி' தந்து துன்புறுத்தாது விட்டுவிடுவதற்கான தாராளவாத மரபின் தர்க்கரீதியான நீட்டிப்பு சைவ உணவுமுறைக்கான தார்மீகக் கடமையை விதிக்க போதுமானது என்று கிளார்க் வலியுறுத்துகிறார்" என்று அப்புத்தகத்தின் முகப்பு விளக்க பத்தி குறிப்பிடுகிறது.[7] தனது 1982-ம் ஆண்டு படைப்பான தி நேச்சர் ஆவ் தி பீஸ்ட்: ஆர் அனிமல்ஸ் மாரல்? என்ற புத்தகத்தில் மனித தரநிலைகளின்படி நெறிமுறையாகத் தோன்றும் சில நடத்தைகளை விலங்குகள் கொண்டிருக்கக்கூடும் என்றாலும், தங்களைத் தாங்களே ஒழுக்கப்படுத்தவோ அல்லது ஒழுக்கக் கோட்பாடுகளை உருவாக்கவோ விலங்குகளால் முடியாது என்பதால் விலங்குகள் நெறிமுறைகளைக் கொண்டவை அல்ல என்று கிளார்க் வாதிடுகிறார்.[8][9] விரிவுரைகள்கிளார்க் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் "ஏதென்ஸிலிருந்து ஜெருசலேம் வரை" என்ற தலைப்பில் கிஃபோர்ட் சொற்பொழிவுகள் (1981–1982), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சமய தத்துவத்தில் ஸ்டாண்டன் சொற்பொழிவுகள் (1987–1989), மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வைல்ட் சொற்பொழிவுகள் (1990) உள்ளிட்ட பல புகழ்பெற்ற சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். இவர் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் ஸ்காட் ஹாலண்ட் சொற்பொழிவு (1992), ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அக்வினாஸ் சொற்பொழிவு (1994), பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் ரீட் டக்வெல் சொற்பொழிவு (1994), டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ராயல் இன்ஸ்டிடியூட் ஆவ் பிலாசபி விரிவுரை (1995), மற்றும் கே.யு. லியூவனில் அக்வினாஸ் சொற்பொழிவு (2000) ஆகியனவும் இவர் ஆற்றிய சொற்பொழிவுகளில் குறிப்பிடத்தக்கவை.[6] தனிப்பட்ட வாழ்க்கைபிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் பண்டைய வரலாற்றுப் பேராசிரியரான கில்லியன் கிளார்க்கை மணந்த ஸ்டீபன் கிளார்க்கிற்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.[6] ஒரு கிறிஸ்தவ சைவ உணவுமுறையாளரான[10] கிளார்க் கிறிஸ்தவ சைவ சங்கத்தின் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கிறார்.[11] படைப்புகள்புத்தகங்கள்
குறிப்பிடத்தக்க புத்தக அதிகாரங்கள்
குறிப்பிடத்தக்க ஆய்வுத்தாள்கள்
இவற்றையும் காண்கமேற்கோள் தரவுகள்
மேலும் படிக்க
வெளியிணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஸ்டீபன் ஆர். எல். கிளார்க்
|
Portal di Ensiklopedia Dunia