ஆக்ஸ்போர்டு விலங்கு நெறியியல் மையம்
ஆக்ஸ்போர்டு விலங்கு நெறியியல் மையம் (ஆங்கிலம்: Oxford Centre for Animal Ethics), அதிகாரப்பூர்வமாக ஃபெரேட்டர் மோரா ஆக்ஸ்போர்டு சென்டர் ஃபார் அனிமல் எத்திக்ஸ் (Ferrater Mora Oxford Centre for Animal Ethics), என்பது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நகரைத் தாயகமாகக் கொண்டு இயங்கும் ஒரு விலங்கு நெறியியல் பரப்பு அமைப்பாகும். வரலாறுஆக்ஸ்போர்டு விலங்கு நெறியியல் மையம் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நகரில் 2006-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இறையியல் துறை உறுப்பினரான ஆண்ட்ரூ லின்சி என்பவரால் நிறுவப்பட்டது. இருப்பினும் இந்த மையம் அப்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படவில்லை.[1] அரா பால் பர்ஸாம், மார்க் எச். பெர்ன்ஸ்டீன் ஆகியோர் இம்மையத்தின் இணைநிறுவனர்கள் ஆவர்.[2] இந்த மையத்திற்கு கட்டலான் மெய்யியலாளரான ஜோஸ் ஃபெர்ரேட்டர் மோரா என்பவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.[1] இந்த மையம் 2007-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டில் உள்ள கெபில் கல்லூரியில் விலங்கு வன்கொடுமைக்கும் மனித வன்முறைக்கும் இடையேயான தொடர்பு பற்றிய சர்வதேச மாநாட்டை நடத்தியது.[3] செயற்பாடுகள்ஆக்ஸ்போர்டு விலங்கு நெறியியல் மையம் கல்வியியல் ஆய்வு மற்றும் பொது விவாதத்தின் மூலம் விலங்குகள் தொடர்பான நெறியியல் முறைகளை வளர்த்து மேம்படுத்துகிறது. மேலும் விலங்கு நெறியியல் துறையின் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் கல்வியாளர்களை ஒருங்கிணைத்து உலகளாவிய சங்கத்தை உருவாக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.[4] அந்த நோக்கத்திற்காக இந்த மையம் ஐக்கிய அமெரிக்காவின் இல்லனாய் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தி ஜர்னல் ஆவ் அனிமல் எத்திக்ஸ் என்ற கல்வியியல் சார்ந்த ஒரு விலங்கு நெறியியல் இதழை வெளியிடுகிறது.[5] மேலும் சர்வதேச பதிப்பகத்தாரான பால்கிரேவ் மேக்மில்லன் அமைப்பினருடன் இணைந்து ஒரு விலங்கு நெறியியல் தொடரையும் நிறுவியுள்ளது.[6] குறிப்பிடத்தக்க ஆளுமைகள்ஆக்ஸ்போர்டு விலங்கு நெறியியல் மையத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ராபர்ட் கார்னர், ஸ்டீவன் எம். வைஸ், மார்ட்டின் ஹெனிக் ஆகியோர் அடங்குவர்.[2] கெளரவ ஆளுமைகளாக ஜே. எம். கோட்ஸி, ஜாய் கார்ட்டர், பாப் பார்கர், பிலிப் வோலன் உள்ளிட்டோர் உள்ளனர்.[7] இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia