ரிச்சர்ட் ட்வைன் (Richard Twine) ஒரு பிரித்தானிய சமூகவியலாளர் ஆவார். இவர்தம் ஆராய்ச்சியானது சுற்றுச்சூழல்சார் சமூகவியல், பாலினம், மனித/விலங்கு, மற்றும் அறிவியல் ஆய்வுகளைப் பற்றியது. சீரிய விலங்குக் கல்வியியல் (critical animal studies) துறையின் "துவக்கப்" பணிக்காக இவர் அறியப்படுகிறார். விலங்குரிமை அறிஞரும் நனிசைவ செயற்பாட்டாளருமான இவர், எட்ஜ் ஹில் பல்கலைக்கழகத்தில் வரலாறு, புவியியல் மற்றும் சமூக அறிவியல் துறையின் துறை வல்லுனராகவும் "தி வீகன் சொசையிட்டி"யின் ஆய்வு ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.[1]
கல்வியும் பணிகளும்
டுவைன் ஸ்டிர்லிங் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் உளவியலில் 1995-ல் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் எசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் 1996-ல் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். 2002-ல் மான்செஸ்டர் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் "சுற்றுச்சூழல் பெண்ணியம் மற்றும் 'புதிய' சமூகவியல் - இரட்டைவாதத்திற்கு எதிரான ஒரு கூட்டு" என்ற தலைப்பில் தனது ஆய்வறிக்கையை எழுதியதன் விளைவாக அவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.[2][3]
"UCL இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேஷன்" இல் பணிபுரிந்த டுவைன், பின்னர் லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் சுமார் பத்தாண்டுகளுக்குப் பணியாற்றினார். அங்கு அவர் ESRC மரபியல் பொருளாதார மற்றும் சமூக அம்சங்களுக்கான மையத்தில் பணியாற்றினார்.[1] லான்காஸ்டரில் இருந்தபோது, "எர்த்ஸ்கேன்" அறிவியல் தொடர்களின் ஒரு பகுதியாக அனிமல்ஸ் அஸ் பயோடெக்னாலஜி: எதிக்ஸ், சஸ்டைனபிலிட்டி அண்ட் கிரிட்டிகல் அனிமல் ஸ்டடீஸ் என்ற ஆய்வினை வெளியிட்டார்.[4] இதுவே பின்னர் சீரிய விலங்குக் கல்வியியல் துறையின் துவக்கப் படைப்பாக இது அமைந்தது.[5] "பயோடெக் மற்றும் இறைச்சித் தொழிற்துறைகளைப் பற்றி விலங்குசார்க் கண்ணோட்டத்தில் வழங்கப்பட்ட வியத்தக்க அளவில் ஒரு மிக நியாயமான பகுப்பாய்வு" என்று அப்படைப்பினை ஒரு திறனாய்வாளர் வர்ணித்தார்.[6]
லான்காஸ்டரில் பணியாற்றி முடித்த பிறகு டுவைன் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் ஆய்வறிஞராகப் பணிபுரிந்தார்.[7] பின்னர் 2014 இல் நிக் டெய்லருடன் இணைந்து தி ரைஸ் ஆஃப் கிரிட்டிகல் அனிமல் ஸ்டடீஸ்: ஃப்ரம் தி மார்ஜின்ஸ் டு தி சென்டர் என்ற தலைப்பில் ஒரு தொகுப்பினை வெளியிட்டார்.[8] அதே ஆண்டில், அவர் எட்ஜ் ஹில் பல்கலைக்கழகத்தோடு பணியாற்றத் துவங்கினார்.[9] 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, எட்ஜ் ஹில்லில் உள்ள வரலாறு, புவியியல் மற்றும் சமூக அறிவியல் துறைகளில் சமூகவியலில் ட்வைன் துறை வல்லுனராக உள்ளார்.[2] அவரது புத்தகம் தி கிளைமேட் கிரைசிஸ் அண்ட் அதர் அனிமல்ஸ் என்ற புத்தகம் சிட்னி யுனிவர்சிட்டி பிரஸ் மூலம் வெளிவர உள்ளது.[10]
தேர்வுசெய்யப்பட்ட படைப்புகள்
டுவைன், ரிச்சர்டு (2010). Animals as Biotechnology: Ethics, Sustainability and Critical Animal Studies. London: Earthscan.
நிக் டெய்லர் மற்றும் ரிச்சர்டு டுவைன், eds. (2014). The Rise of Critical Animal Studies: From the Margins to the Centre. London: Routledge.
டுவைன், ரிச்சர்டு (2017). "Materially Constituting a Sustainable Food Transition: The Case of Vegan Eating Practice". Soiology 52 (1): 166-81. எஆசு:10.1177/0038038517726647.
டுவைன், ரிச்சர்டு (2024). The Climate Crisis and Other Animals. Sydney: Sydney University Press.
ஹன்னிகட், க்வென், ரிச்சர்டு டுவைன், கென்னெத் மென்டார், eds. (2024). Violence and Harm in the Animal Industrial Complex: Human-Animal Entanglements. Abingdon: Routledge.
↑Nocella, Anthony J.; Sorenson, John; Socha, Kim; Matsuoka, Atsuko (2014). "The Emergence of Critical Animal Studies: The Rise of Intersectional Animal Liberation". Counterpoints448: xix-xxxvi.
↑Taylor, Nik; Twine, Richard, eds. (2014). "Contributors". The Rise of Critical Animal Studies: From the Margins to the Centre. Routledge. pp. xvi–xix.