செறிநிலை விலங்கு வளர்ப்பு (intensive animal farming) அல்லது தொழில்துறை கால்நடை உற்பத்தி (industrial livestock production) அல்லது பெருமளவிலான பண்ணைகள் (macro-farms)[1] அல்லது தொழிற்சாலை பண்ணைத்துறை (factory farming)[2] என்பது ஒரு வகையான செறிநிலை வேளாண்மையும், குறிப்பாக செலவுகளைக் குறைத்து உற்பத்தியை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட மாபெரும் கால்நடை வளர்ப்பு முறையுமாகும்.[3] இதை அடைய, வேளாண் வணிக நிறுவனங்கள் நவீன இயந்திரங்களையும் உயிரி தொழில்நுட்பத்தையும் மருந்துகளையும் சர்வதேச வர்த்தகத்தையும் பயன்படுத்தி கால்நடை, கோழி மற்றும் மீன் உள்ளிட்ட பண்ணை விலங்குகளை கூட்டமான எண்ணிக்கையிலும் பெருமளவிலும் வைத்திருக்கின்றன.[4][5][6][7][8] மனித நுகர்வுக்கான இறைச்சி, பால், முட்டைகள் உள்ளிட்டவை இத்தொழிலின் முக்கிய தயாரிப்புகள் ஆகும்.[9]
செறிநிலை விலங்கு வளர்ப்பானது குறைந்த செலவிலும் குறைந்த மனித உழைப்புடனும் அதிக அளவு இறைச்சியை உற்பத்தி செய்ய வல்லது என்றாலும்,[10] இது விலங்கு நலப் பிரச்சினைகள் (விலங்குகளைச் சிறைப்படுத்தல், உடற்சிதைவுகள், மன அழுத்தத்தை ஏற்படுத்துதல், இனப்பெருக்க சிக்கல்கள்),[11][12] சுற்றுச்சூழலுக்கும் வனவுயிர்களுக்கும் தீங்கு விளைவித்தல் (பைங்குடில் வளிமங்கள், காடழிப்பு, யூட்ரோஃபிகேஷன்),[13] பொதுச் சுகாதார சீர்கேடுகள் (விலங்கியல் நோய்கள், தொற்றுநோய் அபாயங்கள், நோய்க்கொல்லி எதிர்ப்பு),[19] மற்றும் தொழிலாளர்களை, குறிப்பாக ஆவணப்படுத்தப்படாத தொழிலாளர்களை, சுரண்டுதல் உள்ளிட்ட பல நெறிமுறைச் சிக்கல்களை எழுப்புவதால் இம்முறையானது பெரிதும் சர்ச்சைக்குரியதாக விளங்குகிறது.[20][21]
"Head to head: Intensive farming", BBC News, March 6, 2001: "Here, Green MEP Caroline Lucas takes issue with the intensive farming methods of recent decades ... In the wake of the spread of BSE from the UK to the continent of Europe, the German Government has appointed an Agriculture Minister from the Green Party. She intends to end factory farming in her country. This must be the way forward and we should end industrial agriculture in this country as well."
↑Sources discussing "industrial farming", "industrial agriculture" and "factory farming":
"Annex 2. Permitted substances for the production of organic foods", Food and Agriculture Organization of the United Nations: "'Factory' farming refers to industrial management systems that are heavily reliant on veterinary and feed inputs not permitted in organic agriculture.
"Head to head: Intensive farming", BBC News, March 6, 2001: "Here, Green MEP Caroline Lucas takes issue with the intensive farming methods of recent decades ... In the wake of the spread of BSE from the UK to the continent of Africa, the German Government has appointed an Agriculture Minister from the Green Party. She intends to end factory farming in her country. This must be the way forward and we should end industrial agriculture in this country as well."
↑"Is factory farming really cheaper?" in New Scientist, Institution of Electrical Engineers, New Science Publications, University of Michigan, 1971, p. 12.