பீட்டர் சிங்கர்
பீட்டர் ஆல்பர்ட் டேவிட் சிங்கர், ஏசி (ஆங்கிலம்: Peter Albert David Singer) (பிறப்பு: ஜூலை 6, 1946)[1] ஒரு ஆஸ்திரேலிய தார்மீக மெய்யியலாளர் ஆவார். தற்போது பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிர்சார் நெறியியல் துறையில் ஐரா டபுள்யூ. டிகாம்ப் பேராசிரியராக உள்ளார். பயனெறிமுறைக் கோட்பாடுகளில் நிபுணத்துவம் பெற்றவரான சிங்கர், மதச்சார்பற்ற, பயனெறிமுறைக் கோட்பாட்டுக் கண்ணோட்டத்தில் நெறிமுறை சிக்கல்களை அணுகுபவர். அவர் குறிப்பாக நனிசைவ வாழ்க்கை முறையை ஆதரிக்கும் அனிமல் லிபரேஷன் (விலங்கு விடுதலை) என்ற தனது 1975-ம் ஆண்டு புத்தகத்திற்காக பெரிதாக அறியப்படுகிறார். மேலும் "ஃபாமின், அஃப்ளுயன்ஸ், அண்டு மொராலிடி" ("பஞ்சம், செல்வம் மற்றும் ஒழுக்கம்") என்ற தனது கட்டுரையில் உலக அளவில் ஏழைகளுக்கு நன்கொடை வழங்கி உதவ வலியுறுத்துகிறார். தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஒரு விருப்பத் தேர்வு பயனெறிமுறைக் கோட்பாட்டாளராக (preference utilitarian) இருந்ததாகக் குறிப்பிடும் அவர், தற்போது ஒரு ஹெடோனிஸ்டிக் பயனெறிமுறைக் கோட்பாட்டாளராக மாறிவிட்டதாக கடர்சினா டி லாசரி-ராடெக் என்பவரோடு இணைந்து எழுதிய தி பாயின்ட் ஆவ் வியூ ஆவ் தி யுனிவர்ஸ் என்ற 2014-ம் ஆண்டு நூலில் கூறியுள்ளார். இரண்டு சந்தர்ப்பங்களில், சிங்கர் மோனாஷ் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையின் தலைவராக பணியாற்றினார். அங்கு அவர் மனித உயிர்சார் நெறியியல் மையத்தை நிறுவினார். 1996-ல் அவர் ஆஸ்திரேலிய செனட்டின் பசுமைக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டுத் தோல்வியுற்றார். 2004-ம் ஆண்டில், சிங்கர் ஆஸ்திரேலிய மனிதநேய சங்கங்களின் கவுன்சிலால் ஆண்டின் ஆஸ்திரேலிய மனிதநேயவாதியாக அங்கீகரிக்கப்பட்டார். 2005-ம் ஆண்டில், தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் நாளிதழ் அவரை ஆஸ்திரேலியாவின் பத்து செல்வாக்கு மிக்க பொது மேதைகளின் பட்டியலில் சேர்த்தது.[4] சிங்கர் "அனிமல்ஸ் ஆஸ்திரேலியா"வின் இணை நிறுவனரும் "தி லைஃப் யூ கேன் சேவ்" அமைப்பின் நிறுவனரும் ஆவார்.[5] இவற்றையும் பார்க்கமேற்கோள் தரவுகள்
வெளியிணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: Peter Singer
|
Portal di Ensiklopedia Dunia