சைவ உணவுமுறைச் சங்கம்
ஐக்கிய இராச்சியத்தின் சைவ உணவுமுறைச் சங்கம் (ஆங்கிலம்: Vegetarian Society of the United Kingdom [VSUK]) என்பது உணவுமுறை மாற்றங்களுக்காக பிரச்சாரம் செய்யும் பதிவு செய்யப்பட்ட ஒரு பிரித்தானிய தொண்டு நிறுவனம் ஆகும்.[1] சைவ மற்றும் நனிசைவ உணவு வகைகளுக்கான வர்த்தக முத்திரைகளை அங்கீகரித்தல், ஒரு சமையல் பள்ளி மற்றும் லாட்டரியை நடத்துதல், மற்றும் இங்கிலாந்தில் தேசிய சைவ உணவுமுறை வாரத்தையும் ஏற்பாடு செய்தல் உள்ளிட்டவை சைவ உணவுமுறைச் சங்கத்தின் பிராதன செயற்பாடுகளாகும். 19-ம் நூற்றாண்டில் பிரிட்டனில் உள்ள பல்வேறு குழுக்கள் இறைச்சியைத் தவிர்த்த உணவுகளை ஊக்குவிக்கத் துவங்கின. இதுவே 1847-ல் சைவ உணவுமுறைச் சங்கத்தை உருவாக்க வழிவகுத்தது. பின்னர் இது 1888-ல் மான்செஸ்டர் மற்றும் லண்டன் சைவ உணவுச் சங்கங்களாகப் பிரிந்து, 1969-ல் மீண்டும் ஒன்றிணைந்து ஒரு தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்து தன் செயற்பாடுகளைத் தொடர்ந்தது. பொதுக் கல்வி மற்றும் உணவு உற்பத்தியாளர்களுடன் ஒருங்கிணைந்தல் ஆகியவை மூலம் இச்சங்கம் சைவ உணவுமுறையைப் பரப்பி வருகிறது. இவற்றையும் காண்கதரவுகள்
மேலும் படிக்க
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia