ஆக்டினியம்(III) சல்பைடு

ஆக்டினியம்(III) சல்பைடு[1]
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஈராக்டினியம் முச்சல்பைடு, டையாக்டினியம் டிரைசல்பைடு
இனங்காட்டிகள்
50647-18-2
InChI
  • InChI=1S/2Ac.3S/q2*+3;3*-2
    Key: FBGRPVYTNBFOJK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [S-2].[S-2].[S-2].[Ac+3].[Ac+3]
பண்புகள்
Ac2S3
வாய்ப்பாட்டு எடை 550.254 கி/மோல்
அடர்த்தி 6.75 கி/செ.மீ3
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம், cl28[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஆக்டினியம்(III) ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இலந்தனம்(III) சல்பைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஆக்டினியம்(III) சல்பைடு (Actinium(III) sulfide) என்பது Ac2S3என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆக்டினியத்தின் சல்பைடு உப்பான இச்சேர்மம் கதிரியக்கப் பண்புடன் காணப்படுகிறது.

தயாரிப்பு

கார்பன் டை சல்பைடும் ஐதரசன் சல்பைடும் சேர்ந்த கலவையுடன் ஆக்டினியம்((III) ஆக்சலேட்டை சேர்த்து 1400 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு ஆறு நிமிடங்கள் சூடுபடுத்தினால் ஆக்டினியம்(III) சல்பைடு உருவாகிறது. எக்சு-கதிர் விளிம்பு விளைவு சோதனையில் ஆக்டினியம்(III) சல்பைடின் உற்பத்தி உறுதி செய்யப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

  1. "Diactinium trisulphide". WebElements. WebElements. Retrieved 16 April 2021.
  2. Zachariasen, W. H. (1949). "Crystal chemical studies of the 5f-series of elements. XII. New compounds representing known structure types". ActaCrystallographica 2 (6): 388–390. doi:10.1107/S0365110X49001016. 
  3. the University of Michigan (1948). The Preparation of Actinium Compounds (in English). U.S. Atomic Energy Commission, Technical Information Division. p. 4. Retrieved 16 April 2021.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya