சோடியம் தயோ ஆண்டிமோனியேட்டு
சோடியம் தயோ ஆண்டிமோனியேட்டு (Sodium thioantimoniate) என்பது Na3SbS4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தின் ஒன்பது நீரேற்று வடிவம் சிகிலிப்பெசு உப்பு என்ற பெயரால் அறியப்படுகிறது. 1799-1867 காலத்தைச் சேர்ந்த கே.எப். சிகிலிப்பெ என்பவர் இந்த உப்பைக் கண்டறிந்தார். சல்போ உப்புகளுக்கு இவை எடுத்துக்காட்டுகளாகும். கனிம வேதியியல் பண்பறி பகுப்பாய்வுகளில் இவை ஒருகாலத்தில் இன உருவாக்கிகளாக கவனத்தை ஈர்த்தன. கட்டமைப்புநீரேறிய இவ்வுப்பு நான்முக SbS43− எதிர்மின் அயனியையும் (rSb-S = 2.33 Å), நீரேறிய சோடியம் நேர்மின் அயனிகளையும்[1][2] கொண்டுள்ளது. அமோனியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட வேறுபட்ட நேர்மின் அயனிகள் தொடர்புள்ள உப்புகளாக அறியப்படுகின்றன. நான்முக சோடியம் மற்றும் ஆண்டிமனி தளங்கள் கொண்ட பலபடியாக நீரற்ற உப்பு அறியப்படுகிறது[3]. தயாரிப்புஆண்டிமனி டிரைசல்பைடும் தனிமநிலை கந்தகம் மற்றும் ஒரு நீரிய சல்பைடு மூலம் ஆகியன வினைபுரிவதால் சோடியம் தயோ ஆண்டிமோனியேட்டு உருவாகிறது.
கந்தகத்தை சோடியம் ஐதராக்சைடுடன் சேர்த்து வெப்ப வினைக்கு உட்படுத்தி வினைக்குத் தேவையான சல்பைடை மறைமுகமாகவும் உற்பத்தி செய்து கொள்ள இயலும்.
மற்றொரு தயாரிப்பு முறையில் 16 பங்கு சோடியம் சல்பேட்டு, 4-5 பங்கு மரக்கரி, 13 பங்கு ஆண்டிமனி சல்பைடு ஆகியன சேர்ந்த கலவை ஒடுக்க வினைக்கு உட்படுத்தப்படுகின்றன. உருவாகும் உருகலை தண்ணிருடன் சேர்த்து பிரித்தெடுத்து நான்கு பங்கு கந்தகம் சேர்த்து சூடுபடுத்துகிறார்கள். கரைசலை ஆவியாக்கும்போது சோடியம் தயோ ஆண்டிமோனியேட்டு படிகமாகிறது. பெரிய நான்முகியான இது நீரில் கரைகிறது. நீரற்ற உப்பை எளிதாகச் சூடுபடுத்தி உருக்க முடியும். நீரேறிய நிலையில் ஈரக்காற்றில் சிவப்பு படலம் உருவாகிறது. தேவையான ஆண்டிமனி(III) சல்பைடு நேரடியாக ஆண்டிமனி(III) சேர்மம் ஒன்றுடன் சல்பைடு மூலங்கள் ஒன்றைச் சேர்த்து சுடுபடுத்தி வழக்கமான தயாரிப்பு முறையில் தயாரித்துக் கொள்ளப்படுகிறது.
வினைகள்நீரேற்று வடிவம் தண்ணீரில் கரைந்து நான்முக SbS43− அயனியைத் தருகிறது. உப்பை அமிலமாக்கல் வினையின் மூலம் குயின்சல்பைடு ஆண்டிமனியாக மாற்றலாம்.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia