கரைசல் அல்லது திண்மநிலை வினையின் வழியாக ஆக்டினியம் புளோரைடு தயாரிக்கப்படுகிறது. முதல் வழிமுறையில் ஆக்டினியம் ஐதராக்சைடு ஐதரோபுளோரிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்தப்படுவதனால் விளைபொருள் வீழ்படிவாக்கப்படுகிறது :[3]
.
திண்மநிலை வினையில் ஆக்டினியம் உலோகம் ஐதரசன் புளோரைடு வாயுவுடன் சேர்த்து பிளாட்டினப் புடக்குவளையில் வைத்து 700 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் ஆக்டினியம் புளோரைடு உருவாகிறது [4][5].
பண்புகள்
ஆக்டினியம் புளோரைடு வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது. 900-1000 பாகை செல்சியசு வெப்பநிலையில் அமோனியாவுடன் வினைபுரிந்து ஆக்டினியம் ஆக்சி புளோரைடைத் தருகிறது.
இலந்தனம் புளோரைடை காற்றில் சூடுபடுத்தினாலேயே எளிமையாக இலந்தனம் ஆக்சிபுளோரைடு உருவாகிறது. ஆனால் மேற்கண்ட முறையில் சூடாக்கினால் ஆக்டினியம் புளோரைடு உருகிவிடுகிறது. ஆக்டினியம் ஆக்சி புளோரைடு உருவாவதில்லை.
மேற்கோள்கள்
↑ 1.01.1Haynes, William M., ed. (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ed.). Boca Raton, FL: CRC Press. p. 4.44. ISBN1439855110.
↑Zachariasen, W. H. (1949). "Crystal chemical studies of the 5f-series of elements. XII. New compounds representing known structure types". Acta Crystallographica2 (6): 388. doi:10.1107/S0365110X49001016.
↑
Haire, Richard G. (2006). "Actinium". In Morss; Edelstein, Norman M.; Fuger, Jean (eds.). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed.). Dordrecht, The Netherlands: Springer Science+Business Media. p. 36. ISBN1-4020-3555-1.
↑Fried, Sherman; Hagemann, French; Zachariasen, W. H. (1950). "The Preparation and Identification of Some Pure Actinium Compounds". Journal of the American Chemical Society72 (2): 771. doi:10.1021/ja01158a034.