கம்போங் டத்தோ அருண் கொமுட்டர் நிலையம்
கம்போங் டத்தோ அருண் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Kampung Dato Harun Komuter Station; மலாய்: Stesen Komuter Kampung Dato Harun); சீனம்: 八打灵) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் பெட்டாலிங் ஜெயா மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1] கம்போங் டத்தோ அருண் நிலையம் பெட்டாலிங் ஜெயாவின் பிரிவு 51 இல் அமைந்துள்ளது; மற்றும் அங்குள்ள போக்குவரத்தைப் பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்டது. கம்போங் டத்தோ அருண் நிலையத்திற்கு அருகிலுள்ள மலாய் கிராமமான கம்போங் டத்தோ அருண் எனும் கிராமத்தின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் பெட்டாலிங் ஜெயா குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குச் சேவை செய்கிறது. இந்த நிலையம் பொதுகம்போங் டத்தோ அருண் நிலையம் பொதுவாக நெரிசல் நேரங்களில் பரபரப்பாக இருக்கும். ஏனெனில் இந்த நிலையம், பயணிகள் தங்களின் தொழில் இடங்களுக்குச் செல்ல பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. ரேபிட் கேஎல் பெரும் கோலாலம்பூரின் பேருந்து வழித்தடம் 641 (Greater Kuala Lumpur Bus Routes) மற்றும் பிஜே சிட்டி பேருந்து வழி PJ01 ஆகியவை இந்த நிலையத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் சேவை செய்கின்றன. இப்பகுதியில் பல தொழிற்சாலைகள் உள்ளதால் தொழிற்சாலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்களும் இந்த நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். மகா லாமா நிலையம்கான்டினென்டல் சைம் டயர் சென்டிரியான் பெர்காட் (Continental Sime Tyre Sdn Bhd), நெஸ்லே நிறுவனம் (Nestle Manufacturing (M) Sdn Bhd), சப்புரா நிறுவனம் (Sapura Resources Bhd) போன்ற தொழில் நிறுவனங்களும்; தாமான் மேடான் ஜெயா (Taman Medan Jaya) மற்றும் தேசா மெந்தாரி (Desa Mentari) போன்ற குடியிருப்புப் பகுதிகளும் இந்த நிலையத்திற்கு அருகில் உள்ளன. இந்த நிலையத்திற்கு 1980-களில் மகா லாமா நிலையம் (MAHA Lama Station) என்று பெயரிடப்பட்டது.[2] ரேபிட் கேஎல்மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia