சிம்பாங் அம்பாட் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Simpang Ampat Railway Stationமலாய்: Stesen Keretapi Simpang Ampat); சீனம்: 新邦安拔火车站) என்பது தீபகற்ப மலேசியா, பினாங்கு மாநிலத்தில் சிம்பாங் அம்பாட் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் சிம்பாங் அம்பாட் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[1]
ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக கொடியாங் நகரில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. 2015-ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் நிறுவனத்தின் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது.[2]
இந்த நகரத்தின் வடக்கில் புக்கிட் மெர்தாஜாம் நகரம்; கிழக்கில் சூன்சாங் நகரம்; தெற்கில் சுங்கை பாக்காப் நகரம்; மேற்கில் பத்து காவான் நகரம் ஆகிய நகரங்கள் உள்ளன. நான்கு நகரங்களுக்கு நடுவில் இந்த நகரம் அமைந்து இருப்பதால் இதற்கு சிம்பாங் அம்பாட் என பெயர் வைக்கப்பட்டது.
சிம்பாங் (Simpang) என்றால் மலாய் மொழியில் சந்திப்பு அல்லது சந்திக்கும் இடம்; அம்பாட் (Ampat) என்றால் எண்ணிக்கையில் நான்கு என்று பொருள்.