பத்து தீகா கொமுட்டர் நிலையம்
பத்து தீகா கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Batu Tiga Komuter Station; மலாய்: Stesen Komuter Batu Tiga); சீனம்: 峇都知甲) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் பத்து தீகா நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1] பத்து தீகா கொமுட்டர் நிலையம் சுபாங் ஜெயா - சா ஆலாம் மாநகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது; மற்றும் அங்குள்ள போக்குவரத்தைப் பூர்த்தி செய்வதற்காகக் கட்டப்பட்டது. பத்து தீகா கொமுட்டர் நிலையத்திற்கு அருகிலுள்ள பத்து தீகா நகரத்தின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது.[2] பொதுதஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் பத்து தீகா குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த நிலையம் சேவை செய்கிறது; மற்றும் இந்த நிலையம் பத்து தீகா கொமுட்டர் நிலையம் பொதுவாக நெரிசல் நேரங்களில் பரபரப்பாக இருக்கும். ஆனால் அருகிலுள்ள மற்ற கொமுட்டர் நிலையங்களைப் போல் நெரிசல் அடர்த்தியாக இல்லை. இந்த நிலையத்திற்கு அருகில் சா ஆலாம் கொமுட்டர் நிலையம்; சுபாங் ஜெயா நிலையம் ஆகிய நிலையங்கள் உள்ளன. பத்து தீகாபத்து தீகா (Batu Tiga) நகரம் சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் மாவட்டத்தில், சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் கீழ் அமைந்து உள்ள ஒரு நகர்ப் புறமாகும். இந்த நகரம் சுபாங் ஜெயா மற்றும் சா ஆலாம் ஆகிய நகரங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இருப்பினும், இது சுபாங் ஜெயா நகர மையத்தை விட சா ஆலாமிற்கு அருகில் உள்ளது. சுபாங் உயர்த் தொழில்நுட்பத் தொழில் பூங்கா (Subang Hi-Tech Industrial Park), இந்த பத்து தீகா நகரின் புறநகரில் அமைந்துள்ளது.[4] சுபாங் ஜெயா மாநகராட்சிபத்து தீகா நகரம், சுபாங் ஜெயா மாநகராட்சியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. முன்னர் காலத்தில் இதன் புறநகர்ப் பகுதியில் ஒரு தொழில்துறை பேட்டை உருவாக்கப்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த நகரத்தின் சுற்றுப்புறங்களில் பல தொழிற்சாலைகளை உருவாக்கின. நிறைய வேலை வாய்ப்புகள். மக்கள் தொகையும் கூடியது. அதன் விளைவாக 2000-ஆம் ஆண்டுகளில் மலிவு விலை குடியிருப்புகள் தோன்றின. சுபாங் ஐடெக் (Subang Hi-Tech) என்பது பத்து தீகாவின் முக்கியத் தொழில்துறை பகுதியாகும். பன்னாட்டு நிறுவனங்களின் பல தலைமையகங்கள் பத்து தீகா தொழில்துறைப் பகுதியில் அமைந்து உள்ளன. மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia